முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய கல்விக் கொள்கையை ஏற்காததால் தமிழகத்துக்கு மத்திய அரசு வஞ்சனை: அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சனம்

வெள்ளிக்கிழமை, 14 மார்ச் 2025      தமிழகம்
Thangam 2023 04 05

சென்னை,  மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையினை தமிழகம் ஏற்றுக்கொள்ளாததால்,  2,152 கோடி ரூபாயை மத்திய அரசு தமிழகத்துக்கு விடுவிக்காமல் வஞ்சித்துள்ளது” என்று  அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

2025-26-ம் நிதி ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட்டை, சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று (மார்ச் 14) காலை சரியாக 9.30 மணியளவில் தாக்கல் செய்தார். பள்ளிக்கல்வித்துறை தொடர்பான அறிவிப்புகளின் போது அவர் பேசுகையில், “பள்ளிக்கல்வித் திட்டத்தில் சமக்ர சிக் ஷா சார்பில் பல்வேறு மாணவர்கள் நலன் சார்ந்த திட்டங்களை, கடந்த 7 ஆண்டுகளாக மாநில அரசு சிறப்புடன் செயல்படுத்தி வருகிறது.

எனினும், இந்தாண்டு மும்மொழிக் கொள்கையை உள்ளடக்கிய மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையினை தமிழகம் ஏற்றுக்கொள்ளாததால், ஏற்கெனவே ஒப்புதல் வழங்கிய நிலையிலும் 2,152 கோடி ரூபாயை மத்திய அரசு தமிழகத்துக்கு விடுவிக்காமல் வஞ்சித்துள்ளது.  ஆசிரியர்களின் ஊதியம் உள்ளிட்ட அத்திட்டங்களுக்கு உரிய நிதியை மாநில அரசே தனது சொந்த நிதி ஆதாரத்திலிருந்து விடுவித்துள்ளது.

பழங்குடியின மாணவர்களின் இடைநிற்றலை நீக்கும் நோக்கத்தோடு, மாணவர்கள் அவர்களுடைய இருப்பிடத்துக்கு அருகிலேயே உயர் கல்வியைத் தொடர்ந்து பயின்றிட அரசு தொடர் முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்தவகையில் தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் தாளவாடி, கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் மற்றும் கல்வராயன் மலை, கிருஷ்ணகிரி மாவட்டம் தளி, நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை உள்ளிட்ட இடங்களில் உள்ள தொலைதூர மலைப்பகுதிகளில் அமைந்துள்ள 14 உயர் நிலைப்பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்.

மதுரையில் உருவாக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்துக்கு இதுவரை 15 லட்சத்துக்கும் மேற்பட்ட வாசகர்கள் வருகை புரிந்துள்ளனர். அதைத்தொடர்ந்து கோவை மற்றும் திருச்சியில் மாபெரும் நூலகங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அறிவைப் பரவலாக்கிடும் முயற்சிகளின் அடுத்தகட்டமாக சேலம், கடலூர் மற்றும் திருநெல்வேலியில் பொதுமக்கள் மற்றும் போட்டித் தேர்வு எழுதிடும் மாணவர்கள் பயன்பெறும் விதமாக தலா 1 லட்சம் புத்தகங்கள் மற்றும் மாநாட்டுக்கூட வசதிகள் உடன் நூலகங்கள் அமைக்கப்படும், என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து