முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.46,767 கோடி: கல்வித் துறைக்கு அதிக முக்கியத்துவம்

வெள்ளிக்கிழமை, 14 மார்ச் 2025      தமிழகம்
School-Education 2022 02 11

 சென்னை, தமிழக பட்ஜெட்டில்  பள்ளிக் கல்வித் துறைக்கு மட்டும் ரூ.46,767 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசு, பள்ளிக் கல்வித் துறைக்கும், உயர் கல்விக்கும் அதிக நிதி ஒதுக்கீடு செய்து மாநிலத்தின் வருங்கால தலைமுறையினர் நல்ல கல்வித் தகுதியோடு வெளிவருவதை உறுதி செய்யும் வகையில் பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்திருக்கிறது. அந்த வகையில், இந்த வரவு - செலவுத் திட்ட மதிப்பீடுகளில் பள்ளிக் கல்வித் துறைக்கு மட்டும் ரூ.46,767 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கல்வித்துறைக்கான சில அறிவிப்புகள்:

  • சென்னை, கோவை, மதுரையில் தலா 1,000 மாணவிகள் பயன்பெறும் வகையில் ரூ.275 கோடியில் மாணவியர் விடுதிகள்!
  • ரூ.3,796 கோடியை மத்திய அரசு விடுவிக்காமல் நிலுவையில் வைத்துள்ளது. இந்த சூழ்நிலையிலும், அரசு பள்ளி ஆசிரியர்களின் ஊதியம் உள்ளிட்ட செலவினங்களுக்கு தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்கிறது.
  • அரசுப் பள்ளிகளில் உள்கட்டமைப்புகளை மேற்கொள்ள ரு.1,000 கோடி ஒதுக்கீடு.
  • ரூ.50 கோடியில் 500 அரசுப் பள்ளிகளில் உயர்கல்வி குறித்து விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்படும்.
  • மேலும் சுமார் 3 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம். அதற்காக ரு.600 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
  • ரூ.65 கோடியில், 2,676 பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் தரம் உயர்வு!
  • ரூ.56 கோடியில், 880 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் தரம் உயர்வு!
  • ரூ.160 கோடியில் 2,000 பள்ளிகளில் கணினி ஆய்வகங்கள் தரம் உயர்வு!
  • காலை உணவுத் திட்டம் நகர்ப்புற அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும்.
  • நகர்ப் பகுதிகளில் அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாடு திட்டத்துக்கு ரூ.2,000 கோடி!
  • அரசுப் பல்கலைக்கழகங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி ரூ.700 கோடியாக உயர்த்தப்படும்.
  • அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மேலும் 15,000 இடங்கள் அமைக்கப்படும்.
  • வளர்ந்து வரும் துறைகளில் புதிய பட்டப்படிப்புகள் உருவாக்கப்படும்.
  • போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக மாநகராட்சிகளில் 1 லட்சம் புத்தகங்களுடன் சிறப்பு நூலகங்கள்.
  • ஏ.ஐ. உள்ளிட்ட துறைகளில் புதிய பட்டய மற்றும் பட்டப்படிப்புகள் உருவாக்கப்படும்.
  • அரச பொறியியல் கல்லூரிகளில் ஏ.ஐ. உள்ளிட்ட நவீன தகவல் தொழில்நுட்பப் படிப்புகள் அறிமுகப்படுத்தப்படும்.
  • பள்ளிப் பாடத் திட்டத்தில் சதுரங்கம் விளையாட்டு சேர்க்கப்படும்.
  • குடிமைப் பணி முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற இளைஞர்களுக்கு ரூ.50,000 ஊக்கத் தொகை.
  • முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்துக்கு ரூ.600 கோடி நிதி ஒதுக்கீடு!
  • அரசு உதவிபெறும் பள்ளிகள் 1ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை மேலும் 3.14 இலட்சம் மாணவர்கள் பயன் பெறுவார்கள்.
  • ரூ.152 கோடியில் 10 புதிய அரசுத் தொழிற்பயிற்சி நிலையங்கள்! அமைக்கப்படும். இதன் மூலம் 1,308 மாணவர்கள் பயன்!
  • கல்லூரி மாணவர்களுக்கு அவரவர் விரும்பும் வகையில் கைக்கணினி அல்லது மடிக்கணினி வழங்கப்படும்.
  • ரூ.10 லட்சம் வரை பெண்கள் பெயரில் பதிவு செய்யப்படும் அசையா சொத்துகளுக்கு பதிவு கட்டணம் 1 சதவீதம் குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து