முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க வரிவிதிப்பின் தாக்கம் குறித்து ஆய்வு செய்யப்படும்: மத்திய அமைச்சர் பங்கஜ் சவுத்ரி

வியாழக்கிழமை, 3 ஏப்ரல் 2025      இந்தியா
Central-government 2021 12-

புதுடெல்லி, அமெரிக்கா விதித்துள்ள கூடுதல் வரி விதிப்பு குறித்து ஆய்வு செய்து முடிவெடுக்கப்படும் என்று மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

இந்தியா உட்பட உலகின் பல நாடுகளுக்கு பரஸ்பர வரிவிதிப்பு முறையை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்காவின் இந்த அறிவிப்பு குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி, "டொனால்ட் ட்ரம்பிற்கு, அமெரிக்கா முதலில், பிரதமர் நரேந்திர மோடிக்கு, இந்தியா முதலில். நாங்கள் முதலில் அதை பகுப்பாய்வு செய்வோம், பின்னர் அதன் தாக்கத்தை மதிப்பிட்டு அதை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து பார்ப்போம்" எனத் தெரிவித்தார்.

இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற டொனால்ட் ட்ரம்ப், பல நாடுகள் அமெரிக்கப் பொருட்களுக்கு அதிக வரியை விதிப்பதாகவும் இதனால் அமெரிக்கப் பொருட்களுக்கான ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் கூறி இருந்தார். பதிலுக்கு, பரஸ்பர வரி விதிப்பு கொள்கையை அமல்படுத்தப் போவதாகவும் கடந்த பிப்ரவரியில் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து வரி விகிதங்கள் குறித்த அறிவிப்பை நேற்று முன்தினம்(ஏப். 2) வெளியிட்டார்.

அதன்படி, சீனா (34 சதவீதம்), ஐரோப்பிய ஒன்றியம் (20 சதவீதம்), வியட்நாம் (46 சதவீதம்), தைவான் (32 சதவீதம்), ஜப்பான் (24 சதவீதம்), இந்தியா (26 சதவீதம்), இங்கிலாந்து (10 சதவீதம்), வங்கதேசம் (37 சதவீதம்), பாகிஸ்தான் (29 சதவீதம்), இலங்கை (44 சதவீதம்), இஸ்ரேல் (17 சதவீதம்) என இறக்குமதி வரி உயர்வு விகிதங்களை டிரம்ப் அறிவித்துள்ளார்.

சீனா, தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது இந்தியப் பொருட்களுக்கு ஒப்பீட்டளவில் குறைந்த வரிகள் விதிக்கப்பட்டுள்ளதால், இந்திய ஏற்றுமதிகளுக்கு சாதகமான வாய்ப்பு உருவாகி இருப்பதாகவும் தொழில்துறையினர் கருத்து தெரிவிக்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 week ago
View all comments

வாசகர் கருத்து