முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாய்லாந்தில் முகமது யூனுஸுடன் பிரதமர் மோடி இன்று பேச்சுவார்த்தை

வியாழக்கிழமை, 3 ஏப்ரல் 2025      உலகம்
Muhammad-Yunus 2024 08 11

பாங்காக், தாய்லாந்து சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி  பிம்ஸ்டெக்  உச்சிமாட்டின் இடையே வங்கதேச தலைமை ஆலோசகர் முகம்மது யூனுஸை இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

தாய்லாந்தில் நடைபெற உள்ள 6வது பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று காலை டெல்லியில் இருந்து தாய்லாந்து தலைநகர் பாங்காக் புறப்பட்டுச் சென்றார். காலை 11 மணி அளவில் பாங்காக் சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டில் வங்கதேச தலைமை ஆலோசகர் முகம்மது யூனுஸ், நேபாள பிரதமர் சர்மா ஒலி, மியான்பர் ராணுவ ஆட்சியாளர் மின் ஆங் ஹ்லைங் உள்ளிட்டோரும் கலந்து கொள்ள இருக்கின்றனர். பிரதமர் மோடியும் முகம்மது யூனுஸும் பாங்காக்கில் இன்று நண்பகல் அளவில் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என தகவல் வெளியாகி உள்ளது. வங்கதேசத்தில் நடந்த ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு  இரு நாடுகளுக்கும் இடையே கசப்புணர்வு அதிகரித்த நிலையில், இந்த சந்திப்பு நடைபெற உள்ளது.

இதேபோல், பிரதமர் மோடி மற்றும் மியான்மர் ராணுவ ஆட்சியின் தலைவர் மின் ஆங் ஹ்லைங்கிற்கும் இடையிலான சந்திப்பும் திட்டமிடப்பட்டுள்ளது. எனினும், இது உறுதிப்படுத்தப்பட வில்லை என்று வட்டாரங்கள் தெரிவித்தன. 2021 இல் அதிகாரத்தைக் கைப்பற்றிய மியான்மர் ராணுவ ஆட்சி தலைமையுடன் நடக்கும் மற்றொரு முதல் சந்திப்பு இதுவாகும். கடந்த வாரம் மியான்மரில் ஏற்பட்ட நிலநடக்கத்தால் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், அந்நாட்டுக்கு உதவும் நோக்கில் ஆபரேஷன் பிரம்மா எனும் திட்டத்தை இந்தியா தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 week ago
View all comments

வாசகர் கருத்து