முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசியலமைப்பு மீதான தாக்குதல்: வக்பு திருத்த மசோதாவுக்கு சோனியா காந்தி எதிர்ப்பு

வியாழக்கிழமை, 3 ஏப்ரல் 2025      இந்தியா
Sonia 2024-02-13

Source: provided

புதுடெல்லி: வக்பு சட்டத் திருத்த மசோதா-2025 எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே மக்களவையில் நேற்று நள்ளிரவில் நிறைவேறியது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் , மேல் சபை எம்.பி. யுமான சோனியா காந்தி வக்பு திருத்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்து உள்ளார்.

நேற்று நடந்த காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டத்தில் அவர் பேசியதாவது:- வக்பு திருத்த மசோதா அரசியலமைப்பின் மீதான வெட்கக்கேடான தாக்குதலாகும். இந்த மசோதா பாராளுமன்ற மக்களவையில் வலுக்கட்டாயமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. சமூகத்தை நிரந்தரமாக பிளவுபடுத்தி வைக்க வேண்டும் என்ற பா.ஜ.க. வின் சதி இதுவாகும். மேலும், ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவிற்கும் காங்கிரஸ் கட்சி தனது எதிர்ப்பை தெரிவிக்கும். அரசியல் அமைப்பை தகர்க்கும் மற்றொரு முயற்சி இதுவாகும்.

கல்வி, சிவில் உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள், நமது கூட்டாட்சி அமைப்பு அல்லது தேர்தல்களை நடத்துதல் என எதுவாக இருந்தாலும், மோடி அரசு நாட்டை ஒரு படுகுழியில் இழுத்துச் செல்கிறது.அங்கு அரசியல் அமைப்பு வெறும் காகிதத்தில் மட்டுமே இருக்கும். அரசியல் அமைப்பை அழிப்பதுதான் அவர்களது நோக்கமாகும்.

மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் பேச அனுமதிக்கப்படாதது நமது ஜனநாயகத்திற்கு மிகுந்த கவலை அளிக்கும் விஷயமாகும். இதேபோல், மேல்சபையில் எதிர்க்கட்சித் தலைவர் கார்கேவும் தான் சொல்ல விரும்புவதையும் சொல்ல வேண்டியதையும் பதில் அளிக்க மீண்டும் மீண்டும் அனுமதிக்கப்படுவது இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 week ago
View all comments

வாசகர் கருத்து