முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உயிரோடு தான் இருக்கிறேன்: யூடியூப் நேரலையில் தோன்றி சாமியார் நித்யானந்தா விளக்கம்

வியாழக்கிழமை, 3 ஏப்ரல் 2025      இந்தியா
Nityananda 2024-01-21

Source: provided

அகமதாபாத்: பாலியல் மற்றும் கடத்தல் வழக்குகளில் கர்நாடகா மற்றும் அகமதாபாத் போலீசாரால் தேடப்படும் சாமியார் நித்யானந்தா கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளிநாடு தப்பி ஓடினார். அவர் இந்துக்களுக்காக கைலாசா என்ற நாட்டை உருவாக்கி இருப்பதாகவும், அங்கு குடியேற விண்ணப்பிக்கலாம் எனவும் சமூக வலைதளங்களில் அறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

ஈக்வடார் அருகே உள்ள ஒரு தீவை விலைக்கு வாங்கி அவர் அந்த தீவுக்கு கைலாசா நாடு என பெயரிட்டதாக கூறப்படுகிறது. மேலும் கைலாசா நாட்டுக்கு என தனி கொடி, பாஸ்போர்ட், நாணயங்கள் உள்ளிட்டவற்றையும் அறிமுகப்படுத்தியதோடு கைலாசா நாட்டுக்கான சர்வதேச தூதர்களையும் அறிவித்தார். ஆனால் இல்லாத நாட்டுக்கு அவர் பெயர் சூட்டுவதாக பலரும் கடுமையாக விமர்சனம் செய்தனர்.

இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நித்யானந்தா உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டதாகவும், அவர் உயிரிழந்து விட்டதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இந்நிலையில், நித்யானந்தா நலமாகவும் பாதுகாப்பாகவும் உள்ளார், நித்யானந்தா இறந்துவிட்டதாக பொய்யான செய்திகள் பரப்பப்படுகின்றன என்று கைலாசா முகநூல் பக்கத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, நேற்று அதிகாலை யூடியூப் நேரலையில் பேசிய நித்யானந்தா வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். யூடியூப் நேரலையில் பேசிய நித்யானந்தா பேசியவை:- ஏப்ரல் 3, வியாழக்கிழமை இந்திய நேரப்படி 4.39 மணிப்படி நான் உயிரோடு, ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக இருக்கிறேன். கடந்த 2 ஆண்டுகளாக இந்து சாஸ்திரங்களுதான் உலகின் முதல் ஆன்மிக AI செயலியை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தேன். அதனால் நேரலையில் வருவதை குறைத்து கொண்டேன்

பலபேர் கைலாசாவை கட்டுப்படுத்த நினைத்தாலும் அவர்கள் நினைக்கும் போக்கிலே கைலாசாவை நடத்த நினைத்தாலும் அது நடக்காமல் போவதால் அவர்களுக்கு ஏற்படும் கோபம், அவர்கள் நடத்தும் தாக்குதல்களை நான் அறிவேன். ஆனாலும் அண்ணாமலையார் (இறைவன்) சொல்வதைத்தான் செய்வேன் .மற்ற நாடுகளின் உள்நாட்டு பிரச்னைகள் பற்றி கேள்வி கேட்பார்கள் என்பதால் மட்டுமே நேரலையில் பேட்டி கொடுப்பதை தவிர்க்கிறேன். கைலாசா பற்றியும் என்னை பற்றியும் கேட்டால் எப்போதும் பதில் தர காத்திருக்கிறேன் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 week ago
View all comments

வாசகர் கருத்து