முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் உள்ள பாக். தூதரகத்துக்கான பாதுகாப்பு வாபஸ்

வியாழக்கிழமை, 24 ஏப்ரல் 2025      இந்தியா
Delhi 2024 08 03

ஸ்ரீநகர், இந்தியா-பாகிஸ்தான் இடையேயான அட்டாரி-வாகா எல்லையும் மூடப்பட்டுள்ள நிலையில் பஹல்காம் தாக்குதலை அடுத்து பாகிஸ்தான் தூதரகத்துக்கான பாதுகாப்பை மத்திய அரசு வாபஸ் பெற்றுள்ளது.

காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. டெல்லியில் பிரதமர் மோடி இல்லத்தில் நடக்கும் இக்கூட்டத்தில் மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாதுகாப்பு செயலாளர், முப்படை தளபதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

இந்தக் கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்தியா-பாகிஸ்தான் இடையேயான அட்டாரி-வாகா எல்லை உடனடியாக மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. சிந்து நதி ஒப்பந்தத்தை ரத்து செய்யவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்துக்கான பாதுகாப்பை மத்திய அரசு வாபஸ் பெற்றுள்ளது. தூதரகம் முன் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலிகளை போலீசார் அகற்றியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து