முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரவுடிகளின் செயல்பாடுகளை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? காவல்துறை தலைமை இயக்குனர் தகவல்

வியாழக்கிழமை, 24 ஏப்ரல் 2025      தமிழகம்
Poleis 2023-09-29

சென்னை, ரவுடிகளின் செயல்பாடுகளை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன..? என்பது குறித்து காவல்துறை தலைமை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

காவல்துறை தலைமை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- காவல்துறையினர் மேற்கொண்ட பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக, 2023 ஆம் ஆண்டை விட 2024 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் கொலைகள், காய வழக்குகள் மற்றும் கலவரங்கள் உள்ளிட்ட மனித உடலுக்கு எதிரான குற்றங்கள் குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளன.

மேலும், கொலை வழக்குகளின் நீண்டகால போக்கின் தரவுகளை பகுப்பாய்வு செய்ததில் 2017-2020 ஆம் ஆண்டில், கொலை வழக்குகள் ஒவ்வொரு ஆண்டும் படிப்படியாக அதிகரித்து, 2019 ஆம் ஆண்டில் 1,745 வழக்குகளுடன் உச்சத்தை எட்டின. இருப்பினும், 2021 மற்றும் அதற்குப் பிறகு, கொலை வழக்குகள் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து குறைந்து வருகின்றன, 2024 ஆம் ஆண்டில் மிகக் குறைந்த கொலை வழக்குகள் (1,563 வழக்குகள்) பதிவாகி உள்ளன. கடந்த 12 ஆண்டுகளில் எந்தவொரு வருடத்தையும் விட மிகக் குறைந்த எண்ணிக்கையிலான கொலை வழக்குகள் 2024 ஆம் ஆண்டில் பதிவாகி உள்ளன.

கடந்த 4 ஆண்டுகளில், காவல்துறை எடுத்த பல்வேறு நடவடிக்கைகளால், மிகக் குறைந்த அளவில் ரவுடி கொலைகள் பதிவாகியுள்ள நிலையில், குறிப்பாக கடந்த 6 ஆண்டுகளில் 2024 ஆம் ஆண்டில் ரவுடி கொலைகள் குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளன. கொலை வழக்குகள் குறைந்து வரும் போக்கின் தொடர்ச்சியாக, 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் (ஜனவரி முதல் மார்ச் வரை), 340 கொலைகள் பதிவாகி உள்ளன, இது முந்தைய ஆண்டின் (2024) முதல் காலாண்டில் 352 கொலைகளாக இருந்தது.

கொலைகளுக்கான காரணங்களில் திடீர் தூண்டுதல், குடும்ப தகராறுகள், திருமணத்தை தாண்டிய உறவு போன்ற பிற வகையான கொலைகளைத் தடுப்பது கடினம். கொலை வழக்குகளில் ரவுடி கொலைகளைக் கட்டுப்படுத்த காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்த நடவடிக்கைகள் கொலைகள் மற்றும் பிற வகையான மனித உடலுக்கு எதிரான குற்றங்கள் குறைப்பதில் நல்ல பலனைத் தந்துள்ளன.

1. அதிக எண்ணிக்கையிலான தடுப்புக்காவல்கள். 2024 ஆம் ஆண்டில், தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் அதிக எண்ணிக்கையிலான சரித்திர பதிவேடு குற்றவாளிகள் (3,645) குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். 2021 க்கு முன்பு அதிகபட்சமாக 2019 ஆம் ஆண்டில் 1,929 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். இருப்பினும், 2021 ஆம் ஆண்டில் 2,484 சரித்திர பதிவேடு குற்றவாளிகள், 2022 ஆம் ஆண்டில் 3380, 2023 ஆம் ஆண்டில் 2832 மற்றும் 2024 ஆம் ஆண்டில் அதிகபட்சமாக 3,645 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.

2. கவனம் செலுத்தி திறம்பட கண்காணிப்பதற்காக, சரித்திர பதிவேடு குற்றவாளிகளை அவர்களின் தற்போதைய செயல்பாட்டின் அடிப்படையில் மறு வகைப்படுத்துதல். மறு வகைப்படுத்தலுக்குப் பிறகு சரித்திர பதிவேடு குற்றவாளிகள் எண்ணிக்கை A+ - 421, A - 836, B - 6398 மற்றும் C - 18,807 ஆகக் குறைந்துள்ளது. A+ மற்றும் A பிரிவின் கீழ் உள்ளவர்களின் எண்ணிக்கையில் குறைவு ஏற்பட்டுள்ளது, இது 50 சதவீதம் அதிகமாகக் குறைந்துள்ளது. இது காவல்துறை மிக முக்கியமான மற்றும் தீவிர செயல்பாடுடைய சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மீது கவனம் செலுத்தவும் அவர்களை திறம்பட கண்காணிக்கவும் உதவியது.

3. தீவிர செயல்பாடுடைய சரித்திர பதிவேடு குற்றவாளிக்கு எதிராக காவல் நிலையத்தில் DARE (Drive Against Rowdy Element) அதிகாரிகளை நியமித்தல். ரவுடிகள் தொடர்பான சம்பவங்களைத் தடுக்க அவர்களின் தற்போதைய நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் பணி இந்த DARE அதிகாரிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

4. பல சந்தர்ப்பங்களில், சிறைக்குள் இருந்தபடியே பழிவாங்கும் கொலைகளைச் செய்ய ரவுடிகளால் சதித்திட்டம் தீட்டப்படுகிறது. பழிவாங்கும் மற்றும் ரவுடி தொடர்பான கொலைகளைத் தடுக்கவும், சிறைக்குள் அவர்களின் நடவடிக்கைகள் குறித்த தகவல்களைப் பெறவும் சிறைகளில் உள்ள ரவுடிகள் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகிறார்கள்.

5. விசாரணை முடிவுறும் நிலையில் உள்ள நீதிமன்ற வழக்குகளில் தண்டனை கிடைக்கும் வாய்ப்பு உள்ள (391 வழக்குகள்) அடையாளம் காணப்பட்டு கண்காணிக்கப்பட்டன, இதனால் கடந்த 2024 ஆம் ஆண்டில் 242 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர், இதில் 150 ரவுடிகளுக்கு எதிராக 10 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேற்பட்ட தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இது கடந்த 12 ஆண்டுகளில் மிக அதிகமாகும்.

6. ஜாமீன் பினை நிபந்தனைகளை மீறியதால் 68 ரவுடிகளின் ஜாமீன்கள் பினை ரத்து செய்யப்பட்டன, இது கடந்த 12 ஆண்டுகளில் செய்யப்பட்ட அதிகபட்ச ஜாமீன் பினை ரத்து ஆகும்.

7. இதற்கு முன்பு செய்யப்படாத ரவுடிகளுக்கு எதிரான நிதி விசாரணை தற்போது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நிதி ஆதாரத்தை தடுக்கும் வகையில், நிதி விசாரணையை நடத்துவதற்கான விரிவான செயல் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. நிதி விசாரணையை நடத்துவதற்காக 41 தீவிர செயல்பாடுடைய ரவுடிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ரவுடிகள் மற்றும் பிற சமூக விரோத சக்திகளுக்கு எதிரான இந்த முறையான, முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள், தமிழ்நாட்டில் பழிவாங்கும் மற்றும் ரவுடி கொலை வழக்குகள் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்து நல்ல பலனைத் தந்துள்ளன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 20 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 21 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 22 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 23 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து