முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பஹல்காம் தாக்குதலில் பலியானவரின் குடும்பத்தினரை சந்தித்து கேரள முதல்வர் ஆறுதல்

ஞாயிற்றுக்கிழமை, 27 ஏப்ரல் 2025      இந்தியா
Pinarayi-Vijayan 2023 04 12

Source: provided

கொச்சி : கொச்சியில் பஹல்காம் தாக்குதலில் பலியானவரின் வீட்டிற்கு ஞாயிற்றுக்கிழமை சென்று கேரள முதல்வர் பினராயி ஆறுதல் கூறினார்.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் அருகே சுற்றுலாத் தலத்தில் பயங்கரவாதிகள் கடந்த செவ்வாய்க்கிழமை நடத்திய கொடூர தாக்குதலில் 25 இந்தியா்கள், ஒரு நேபாளி உள்பட 26 போ் உயிரிழந்தனா்; பலா் காயமடைந்தனா். இச்சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிா்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு உலக நாடுகளும் கண்டனங்களை தெரிவித்துள்ளன. இந்த பயங்கரவாதத் தாக்குதலில் கேரளத்தைச் சேர்ந்த ஒருவரும் பலியானார். ராமச்சந்திரன் தனது மனைவி ஷீலா, துபாயில் பணிபுரியும் மகள் ஆரத்தி மற்றும் அவரது இரட்டை மகன்களுடன் காஷ்மீரில் விடுமுறையைக் கழிக்கச் சென்றிருந்தார்.

அப்போது அவரது மகள் மற்றும் பேரக்குழந்தைகள் முன்னிலையில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். ராமச்சந்திரனின் இறுதிச் சடங்குகள் வியாழக்கிழமை முழு அரசு மரியாதையுடன் நடைபெற்றன. இந்த நிலையில் பஹல்காம் தாக்குதலில் பலியான ராமச்சந்திரனின் வீட்டிற்கு ஞாயிற்றுக்கிழமை நேரில் சென்று கேரள முதல்வர் பினராயி ஆறுதல் கூறினார்.

நிதியமைச்சர் கே.என். பாலகோபால் மற்றும் சி.பி.எம். மாநிலச் செயலர் எம்.வி. கோவிந்தன் ஆகியோரும் முதல்வருடன் உடன் சென்றனர். பின்னர் முதல்வர் பினராயி விஜயன் ஊடகங்களைச் சந்திக்காமல் அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து