முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கலப்பின கஞ்சாவுடன் மலையாள திரைப்பட இயக்குநர்கள் 2 பேர் கைது

ஞாயிற்றுக்கிழமை, 27 ஏப்ரல் 2025      சினிமா
Kerala 2025-04-27

Source: provided

கொச்சி : கலப்பின கஞ்சாவுடன் 2 இயக்குநர்களை போலீசார் கைது செய்து உள்ளனர். இந்த சம்பவம் மலையாள சினிமாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

இது பற்றிய விவரம் வருமாறு:- கேரளாவில் சமீபத்தில் திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் 'ஆலப்புழா ஜிம்கானா'. இந்த படத்தை இயக்கியவர் காலித் ரகுமான். அதேபோல் மற்றொரு இயக்குநர் அஷ்ரப் ஹம்சா.இவர் தமாஷா, பீமன்டே வழி, சுலைகா மன்சில் உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார். இவர்கள் கொச்சியில் உள்ள ஒளிப்பதிவாளர் சமீர் தாஹிர் என்பவருக்கு சொந்தமான வீட்டில் கதை விவாதத்தில் ஈடுபட்டனர்.

இங்கு நேற்று அதிகாலை கலால் துறையினர் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 2 இயக்குநர்கள் உள்பட 3 பேர் அங்கு இருந்தனர். அவர்களிடம் போதைப் பொருள் இருந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 1½ கிராம் கலப்பின கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இயக்குநர்களுடன் இருந்த 3-வது நபர் ஷாகித் முகமது.இவர்களுக்கு போதைப் பொருள் பயன்படுத்தும் பழக்கம் இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

இருப்பினும் போலீசார் சோதனையின் போது அவர்கள் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை. இதன் காரணமாக விசாரணைக்கு பிறகு 3 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் போதைப் பொருளை எங்கிருந்து வாங்கினார்கள்? என்பது குறித்து விசாரணை நடை பெற்று வருகிறது.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து