முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுச்சேரி பா.ஜ.க. பிரமுகர் கொலை வழக்கில் 8 பேர் கைது

திங்கட்கிழமை, 28 ஏப்ரல் 2025      தமிழகம்
Jail

புதுச்சேரி, பா.ஜ.க. பிரமுகர் கொலை வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.  

புதுவை கருவடிகுப்பம் சாமி பிள்ளை தோட்டத்தைச் சேர்ந்தவர் காசிலிங்கம். இவரின் மகன் உமாசங்கர் (38). பா.ஜ.க.வின் இளைஞரணியில் முன்னாள் நிர்வாகியாக இருந்தவர். இவர் லாட்டரி அதிபர் மாட்டின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்டின் பிறந்தநாளை கருவடிகுப்பத்தில்கொண்டாட ஏற்பாடு செய்து கொண்டிருந்தார். விழா ஏற்பாடுகளைப் பார்த்துவிட்டு திருமண மண்டபத்திலிருந்து வெளியே வந்த உமாசங்கரை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் உமாசங்கர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இதைத் தடுக்க முயன்ற நண்பர் அருள் ராஜுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதன்பின் அந்தக்கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. இதுதொடர்பாக லாஸ்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் விசாரணை துவக்கினர். முக்கிய வழக்கு என்பதால் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று எஸ்.எஸ்.பி கலைவாணன் செய்தியாளர்களிடம் கூறியது: “கொலை சம்பவத்தைத் தொடர்ந்து தனிப்படைகள் அமைத்து 34 மணி நேரத்துக்குள் 8 பேரைக் கைது செய்துள்ளோம். குற்றச் சம்பவத்தில் மொத்தம் 12 பேர் இடம்பெற்றுள்ளனர். இதில் மூளையாக கர்ணா என்ற திருநாவுக்கரசு செயல்பட்டுள்ளார். இதில் 9 பேர் சாமிபிள்ளைத் தோட்டத்தைச் சேர்ந்தவர்கள்.

கருணாவுக்கும், இறந்த உமாசங்கருக்கும் தனியார் ஒயின்ஷாப் அமைவதில் எதிர்ப்பு தெரிவிப்பதில் பிரச்சினை ஏற்பட்டது. அதேபோல் நிலத்தகராறு பிரச்சினையும் இருந்தது. 5 மாதங்களாகத் திட்டமிட்டு, இரண்டு முறை கொல்ல முயற்சி எடுத்துள்ளனர். சனிக்கிழமை இரவு தனியார் உணவு விநியோகிக்கும் நிறுவனத்தைச் சேர்ந்தவர் போல் வேடமிட்டுச் சென்று உளவு பார்த்து தகவல் தந்துள்ளனர்.

அதையடுத்து முககவசம் அணிந்து நான்கு வண்டிகளில் வந்த கும்பல் கத்திகளைப் பயன்படுத்தித் தாக்குதல் ஈடுபட்டு உமாசங்கரைக் கொன்றுள்ளனர். காலாப்பட்டு பகுதியில் கத்திகளை வீசியுள்ளனர். இதில் 4 கத்திகள், 4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்துள்ளோம். இதில் கருணா தலைமை வகித்துள்ளார். தற்போது தலைமறைவாகவுள்ள கருணாவை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் பிடிப்போம்.  என்று குறிப்பிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து