முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இதுபோல் எப்போதும் நடக்கக் கூடாது: பஹல்காம் தாக்குதல் குறித்து வேதனை தெரிவித்த சூர்யா..!

ஞாயிற்றுக்கிழமை, 27 ஏப்ரல் 2025      சினிமா
Surya 2023 07-16

Source: provided

ஐதராபாத் : இனிமேல் இதுபோல் எப்போதும் நடக்கக் கூடாது என பஹல்காம் தாக்குதல் குறித்து நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘ரெட்ரோ’ திரைப்படம் மே 1-ம் தேதி திரைக்கு வருகிறது. இதனை விளம்பரப்படுத்தும் பணிகளில் சூர்யா ஈடுபட்டுள்ளார். ஐதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக விஜய் தேவரகொண்டா, தயாரிப்பாளர் நாக வம்சி, இயக்குநர் வெங்கி அட்லுரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை சூர்யா வெளியிட்டார். அதனை வெங்கி அட்லுரி இயக்க, நாக வம்சி தயாரிக்க இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் எந்த ஒரு பயங்கரவாதமும் இழப்பை தான் கொண்டு வரும். இனிமேல் இதுபோல் எப்போதும் நடக்கக் கூடாது என விரும்புகிறேன். பயங்கரவாத தாக்குதலில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்காக என் பிரார்த்தனைகள் எப்போதும் இருக்கும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார். ‘ரெட்ரோ’ படத்தினைத் தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் படத்தில் சூர்யா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து