முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.900 கோடியை நெருங்கும் ஏழுமலையான் வருமானம்!

செவ்வாய்க்கிழமை, 30 செப்டம்பர் 2014      ஆன்மிகம்
Image Unavailable

 

திருமலை, அக்.01 - உலகின் பணக்கார கடவுள் என கூறப்படும் திருப்பதி ஏழுமலை யானுக்கு பக்தர்கள் வழங்கும் உண்டியல் காணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. 1975-ல் வெறும் ரூ.6 கோடியாக இருந்த ஆண்டு வருமானம் இப்போது ரூ.900 கோடியை நெருங்கி உள்ளது.

ஏழுமலையானை தரிசிப்பதற் காக உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளிலி ருந்தும் பக்தர்கள் வருகின்றனர். பல்வேறு நேர்த்திக் கடன்களை செலுத்தி சாமி தரிசனம் செய்யும் இவர்கள், உண்டியலில் காணிக்கை செலுத்துகின்றனர். சாமி உண்டியலில் பணம் மட்டுமின்றி தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், விசிடிங் கார்டுகள், கல்யாண பத்திரிக்கைகள் போன்ற வையும் இருக்கும். உண்டியலில் செலுத்தப்படும் காணிக்கைகள் தினந்தோறும் எண்ணப்படுகின்றன. இதில் தேவஸ்தான, வங்கி ஊழியர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டர்கள் பங்கேற்கின்றனர்.

கடந்த 1975-ம் ஆண்டுக்கு முன்பு உண்டியல் காணிக்கை, பிரசாதம் விற்பனை, சேவை டிக்கெட்டுகள் விற்பனை ஆகியவை மூலம் கிடைக்கும் வருமானம் அனைத்தையும் தினமும் வரவு வைத்தனர். 1975-க்கு பிறகு உண்டியல் வருமானம் மட்டும் தனியாக வரவில் வைக்கப்பட்டது. தினந்தோறும் எண்ணப்படும் பணம் அன்றைய தினமே வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது. இதனால் ஆண்டுதோறும் உண்டியல் வருமானம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

2013-14-ல் உண்டியல் வருமானம் ரூ.900 கோடியைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுவதாக தேவஸ்தானம் தெரிவித் துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்