முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அபார்ஷன் கால வரம்பு 24 வாரமாக உயர்கிறது!

வெள்ளிக்கிழமை, 31 அக்டோபர் 2014      இந்தியா
Image Unavailable

 

மும்பை, நவ.01 - அபார்ஷன் செய்து கொள்வதற்கான கால வரம்பை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

கரு உண்டான தினத்திலிருந்து 20 வாரங்களுக்குள் அபார்ஷன் செய்து கொள்ள சட்டம் தற்போது அனுமதி அளிக்கிறது. அதற்கு பிறகு அபார்ஷன் செய்வது சட்டப்படி குற்றமாகும். 20 வாரங்கள் முடிந்த நிலையில் கருவில் இருக்கும் குழந்தை குறையுடன் இருப்பது தெரியவந்தாலும் அதனை அபார்ஷன் செய்ய முடியாது. இதை எதிர்த்து மும்பையை சேர்ந்த நிகேதா என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவரது குழந்தைக்கு இருதயத்தில் ஓட்டை இருந்தது 20 வாரத்துக்கு பின்னர் தெரியவந்தது. ஐகோர்ட் அனுமதி அளிக்காததை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து அபார்ஷன் செய்ய அனுமதி பெற்றார்.

அப்போது இந்தப்பிரச்னை நாடு முழுவதும் பரவலாக பேசப்பட்டது. இதை தொடர்ந்து தற்போது பிரசவம் மற்றும் கருகலைப்பு சட்டத்தில் திருத்த வரைவு மசோதா ஒன்றை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உருவாக்கியுள்ளது. அதனை சுகாதாரத்துறை இணையதளத்தில் இரு தினங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தது. அதில் பெண்களின் உடல்நலம், மனநலம், குறிப்பிட்ட சூழல் ஆகிய வற்றை கருத்தி கொண்டு தேவைப்பட்டால் அபார்ஷன் செய்து கொள்ளும் காலத்தை 24 வாரங்கள் வரை அனுமதிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிறக்கப்போகும் குழந்தை உடல் நலம் குன்றியோ, மன வளர்ச்சி குன்றியோ ஏதேனும் குறைபாடுகளுடன் பிறக்கும் என்று மருத்துவ ரீதியாக தெரியவரும் பட்சத்தில் அபார்ஷன் செய்து கொள்வதற்கான காலவரம்பை குறிப்பிட்ட சூழலில் மேலும் நீடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்