முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆடவர் வாலிபால் போட்டியை பார்த்த பெண்ணுக்கு சிறை

செவ்வாய்க்கிழமை, 4 நவம்பர் 2014      உலகம்
Image Unavailable

 

டெஹரான், நவ.05 - ஈரான் விதிகளை மீறி ஆடவர் வாலிபால் விளையாட்டு போட்டியை காண சென்றதாக அந்நாட்டில் பிரிட்டன் பெண்ணுக்கு ஓர் ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

கான்ச்சே கவாமி கடந்த ஜூன் மாதம் ஈரான் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்கு இடையே நடத்த வாலிபால் விளையாட்டு போட்டியை காண சென்ற குற்றத்துக்காக அந்த விளையாட்டு மைதானத்திலேயே கைது செய்யப்பட்டார். அவருடன் பெண் நிருபர்கள் சிலரும் கைது செய்யப்பட்டனர். அடுத்த 2 நாட்களில் கவாமி விடுவிக்கப்பட்ட நிலையில் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

இது குறித்து ஈரான் போலீஸ் அதிகாரி கூறும்போது, "ஈரானில் ஆடவர் விளையாட்டு போட்டிகளில் பெண்கள் கலந்து கொள்ள தடை உள்ளது. பெண்கள் மீது ஆண்கள் முறையற்ற வகையில் அத்துமீறல்கள் நடப்பதை தவிர்க்கும் விதத்திலேயே இது போன்ற விதிகள் இங்கு உள்ளன. அதனை மதித்து நடக்க வேண்டிய பெண்களின் கடமை" என்று கூறினார்.

ஈரானில் இஸ்லாமிய நடைமுறைகளை முன்வைத்து அரசு நிர்வாகம் நடக்கிறது. இதனால் அங்கு இது போன்று பல விதிகள் நடைமுறையில் உள்ளது. இதனால் கான்ச்சே மீது அரசின் விதிகளை மீது நடந்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர் எவின் சிறைக்கு விசாரணைகாக அனுப்பப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்