முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிலிப் ஹியூஸ் இறுதிச்சடங்கு:கோலி - ரோகித் - முரளி விஜய் பங்கேற்பு

புதன்கிழமை, 3 டிசம்பர் 2014      விளையாட்டு
Image Unavailable

நியூ சவுத் வேல்ஸ் - பவுன்சர் பந்துவீச்சில் தலையில் படுகாயமடைந்த ஆஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியூக்ஸ், சிகிச்சை பலனின்றி சில தினங்களுக்கு முன் உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்கு நேற்று நடைபெற்றது. அதனையொட்டி நடைபெறும் வழியனுப்பு நிகழ்வில் பலரும் பேசினர். .
நியூ சவுத் வேல்ஸ் அருகில் உள்ள அவரது சொந்த ஊரான மேக்ஸ்வில்லி உயர்நிலை பள்ளியில் நடைபெற்ற இந்த வழியனுப்பு நிகழ்வில் இந்திய அணி சார்பில் கேப்டன் கோலி, மேலாளர் ரவி சாஸ்திரி பயிற்சியாளர் டங்கன் ப்ளெட்சர் ஆகியோர் உள்பட 5000 பேர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி கேப்டன் கிளார்க் உள்பட அனைத்து வீரர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் பேசிய ஹியூக்சின் சகோதரர் ஜேசன் ஹியூக்ஸ், அவரை விட நல்ல தம்பியை நான் கேட்கமுடியாது, அவருக்கு நான் இறுதி மரியாதை செலுத்துவதை என்னால் நம்பமுடியவில்லை, இந்த நேரத்தில் எங்கள் குழந்தைப்பருவ நிகழ்வுகளை நினைத்துப்பார்க்கிறேன். நாங்கள் இருவரும் இணைந்து கிரிக்கெட் விளையாடியுள்ளோம். நானும் பிலிப்பும் சேர்ந்து மோஸ்மேன் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 210 ரன்கள் எடுத்தோம்.
வெற்றி ஒன்றையே குறிக்கோளாக கொண்டு, நாள் முழுவதும், தொடர்ந்து மறுநாள் முழுவதும் பேட்டிங் செய்வதை பிலிப் பெரிதும் விரும்புவார் என ஜேசன் பெருமையுடன் குறிப்பிட்டார்.
பிலிப் ஹியூக்ஸ் இறுதி சடங்கில் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் பேசியதாவது:–
உனக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. உன்னை எதிர்பார்த்து காத்து கொண்டிருப்பேன். எனக்கு தெரியும் இது வித்தியாசமான எண்ணம் என்று. இருந்தாலும் ஒவ்வொரு நிமிடமும் அவரது குரலை கேட்க அல்லது அவரது முகத்தை ஏதாவது மூலையில் பார்க்க காத்து இருக்கிறேன். இது அவரது ஆத்மாவை அழைக்க முயற்சிக்கிறோமா? அவரது ஆத்மா என்னுடன் இருக்கும். அது என்னைவிட்டு விலகாது என்று நம்புகிறேன்.
ஹியூக்ஸ் கடைசியாக விளையாடிய மைதானத்துக்கு சென்றேன். அவர் கீழே விழுந்த இடத்தில் இருந்த புற்களை தொட்டேன். அப்போது அவர் எனக்குள் இருப்பதை உணர்ந்தேன். எனது கால்கள் மேலே செல்கிறதா என்று பார்த்தேன். ஆனால் நான் சரியாக இருந்தேன். ஹியூக்ஸ் ஆத்மா என்னை ரன்களை குவிக்க ஊக்குவிக்கும்.
அவரது ஆத்மா எங்களது ஒவ்வொரு ஆட்டத்திலும் பங்கேற்கும். அவர் என்னிடம் அடிக்கடி சொல்வார். நாம் தோண்டி எடுத்து விட்டு (ரன்களை) ‘டீ’ குடிக்க செல்வோம் என்று. இப்போது சொல்கிறேன். நாம் தோண்டி எடுக்க... (இப்படி சொன்னதும் கிளார்க் அழுதார்). நாம் கட்டாயம் தோண்டி எடுக்க செல்ல வேண்டும். அதன்பின் ‘டீ’ குடிக்க செல்ல வேண்டும். ஒன்றாக விளையாட வேண்டும். எனது இளைய சகோதரர், உனது ஆத்மா சாந்தி அடையட்டும். இவ்வாறு உருக்கமாக பேசினார்.
ஹியூக்ஸின் இறுதி ஊர்வலத்தில் பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், இன்னாள் ஆஸ்திரேலியா வீரர்கள் உள்ளிட்டோர் திரண்டு வந்து கலந்து கொண்டனர். 5000க்கும் மேற்பட்டோர் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டனர். ஹியூக்ஸின் இறுதி ஊர்வலத்தின்போது கிராமத்தினர் மொத்தமாக திரண்டு வந்து இரு பக்கமும் நின்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து