முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

24 குழந்தைகளுக்கு வீரதீர செயலுக்கான விருதுகள்

சனிக்கிழமை, 24 ஜனவரி 2015      இந்தியா
Image Unavailable

புது டெல்லி - டெல்லியில் நடைபெற்ற விழாவில் 24 குழந்தைகளுக்கு தேசிய வீரதீர விருதுகளை பிரதமர் மோடி வழங்கினார்.

தேசிய வீரதீர விருதுக்கு நாகாலாந்தைச் சேர்ந்த மோன்பேனி எஸ்ங், உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த ரேஷம்ஃ பாத்திமா, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ரியா செளத்ரி, குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஜீல் ஜிதேந்திர மராத்தே உள்பட 24 குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு டெல்லியில் நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடி வீரதீர விருதுகளை அளித்து கொரவித்தார். அப்போது அவர் பேசியதாவது:

நீங்கள் அனைவரும் உங்கள் இலக்குகளையும் கனவுகளையும் அடைய ஓய்வின்றி உழைக்க வேண்டும். மற்றவர்களுக்காக வாழ வேண்டும் என்று நமக்கு உத்வேகம் அளிக்கும் ஒரு விஷயத்தை கடவுள் நம் அனைவருக்குள்ளும் வைத்துள்ளார் என்பதை நிரூபிக்கும் வகையில் இந்தக் குழந்தைகளின் வீரதீரச் செயல்கள் அமைந்துள்ளன. மற்றவர்களுக்காக இறக்கும் வாய்ப்பு ஒவ்வொருவருக்கும் கிடைக்கிறது. எனினும், மற்றவர்களுக்காக வாழும் வாய்ப்பும் ஒவ்வொருவருக்கும் கிடைக்கிறது. ஆனால், மிகச் சிலரால் மட்டுமே இதை நிறைவேற்ற முடிகிறது.

எதிர்மறையான சூழலை எதிர் கொண்டு, விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல் இந்தக் குழன்தைகள் வீரத்தைக் காட்டியுள்ளனர் என்றார் பிரதமர் மோடி. இந்த விழாவில் மத்திய பெண்கள், குழந்தைகள் நலத் துறை அமைச்சர் மேனகா காந்தியும் கலந்து கொண்டார். வீரதீர விருது பெற்ற குழந்தைகளில் மோன்பேனி எஸங், ஆற்றில் தவறி விழுந்த தனது பாட்டியின் உயிரைக் காப்பாற்றினார்.

ரேஷம் ஃபாத்திமாவை அவரது உறவினர் ஒருவர் கத்தி முனையில் கடத்திச் சென்று திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினார். அதற்கு ரேஷம் மறுத்ததால் அவரது முகத்தில் உறவினர் அமிலத்தை ஊற்றினார். முகத்தில் படுகாயம் ஏற்பட்டபோதிலும் சற்றும் கலங்காமல் உறவினர் குறித்து காவல் நிலையத்தில் தைரியமாகப் புகார் அளித்தார் ரேஷமா. அதன் பிறகே மருத்துவமனைக்குச் சென்றார்.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ரியா சொத்ரியின் வீட்டிற்குள் திடீரென்று மர்ம நபர்கள் புகுந்து தாக்குதல் நடத்தினர். அப்போது வீரத்துடன் சண்டையிட்டு தந்தையைக் காப்பாற்றினார் ரியா. இந்த மோதலில் இறந்த ரியாவுக்கு மரணத்துக்குப் பிந்தைய வீரதீர விருது அறிவிக்கப்பட்டது. அவரது குடும்பத்தினர் இந்த விருதைப் பெற்றுக்கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து