முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கமல்படத்துக்கு எதிரான மனு தள்ளுபடி

திங்கட்கிழமை, 27 ஏப்ரல் 2015      சினிமா
Image Unavailable

சென்னை: நடிகர் கமல் நடித்த உத்தம வில்லன் படத்துக்கு தடை விதிக்க கோரி விஷ்வ இந்து பரிஷத் தொடர்ந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

இதுதொடர்பாக , விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் தமிழ்நாடு பிரிவின் ஒருங்கிணைப்பு செயலாளர் எஸ்.ராஜா தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:- திருப்பதி பிரதர்ஸ் பட நிறுவனம் சார்பில் நடிகர் கமல் நடித்த உத்தம வில்லன் படம் மே முதல் தேதி வெளியாகிறது. படத்தை ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ளார். இந்த படத்தின் பாடல்கள்  அண்மையில்  வெளியிடப்பட்டது. 

அதில், ‘என் உதிரத்தின் விதை’ என்று தொடங்கும் பாடலில், ‘வெக்கங்கெட்டு பன்றியும் நாம் என்றவன் கடவுள்’ என்ற வரி வருகிறது. இந்த வரி, இந்து மத மக்களின் நம்பிக்கைக்கு எதிராக உள்ளது. இந்து மதத்தில் பசு, மீன், காக்கை, அணில், குரங்கு, மரம் என்று அனைத்து உயிரினங்களுக்கும் மரியாதை செலுத்தி, அவற்றை வழிப்படுவது வழக்கமாகும் .  இந்து மத கடவுள், அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலை நாட்ட பல்வேறு அவதாரங்களை எடுத்துள்ளனர்.

இவற்றை எல்லாம் அவமதிக்கும் விதத்தில்,இந்த பாடல்கள் உள்ளன. எனவே,  அந்த வார்த்தையை நீக்கவேண்டும் என்று திரைப்பட தணிக்கை வாரியத் தலைவர், தமிழக உள்துறை செயலாளர் ஆகியோருக்கு கடந்த 6-ந் தேதி புகார் மனு அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார் . இந்த மனு நீதிபதி டி.ராஜா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரணைக்கு ஏற்பதற்கான முகாந்திரம் இல்லை என்று கூறி, உத்தமவில்லன் படத்தை வெளியிட தடை கேட்ட மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி  உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து