முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிக வருவாய் ஈட்டும் வீரர்கள்: போர்ப்ஸ் பட்டியலில் இடம்பெற்ற தோனி

வியாழக்கிழமை, 11 ஜூன் 2015      விளையாட்டு
Image Unavailable

நியூயார்க்: தோனியின் மொத்த வருவாய் 31 மில்லியன் டாலர்கள். சம்பளம் மற்றும் ஊக்கத்தொகை, பரிசுத் தொகை வருவாய் 4 மில்லியன் டாலர்களாகவும், விளம்பர வருவாய் 27 மில்லியன் டாலர்களாகவும் உள்ளது. உலகில் அதிக வருவாய் ஈட்டும் 100 விளையாட்டு வீரர்களுக்கான போர்ப்ஸ் இதழ் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒரே இந்திய விளையாட்டு வீரர் தோனியாவார்.

அமெரிக்க குத்துச் சண்டை வீரர் பிளாய்ட் மேவெதர் இந்தப் பட்டியலில் முதலிடம் வகிக்கிறார். கடந்த ஆண்டு போர்ப்ஸ் பட்டியலில் 22-ம் இடம் இருந்த இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் தோனி இந்த ஆண்டு 23-ம் இடத்துக்கு பின்னடைவு கண்டார். இது குறித்து போர்ப்ஸ், “2015 உலகக் கோப்பை அரையிறுதிக்கு இந்திய அணியை வழிநடத்திச் சென்றார். பிறகு ஆஸ்திரேலியாவிடம் அரையிறுதியில் தோல்வி தழுவியது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 முறை தலைமையேற்று வழிநடத்தியதில் 6 முறை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

"எம்.எஸ்.தோனி: தி அன் டோல்ட் ஸ்டோரி, என்ற தனது சுயசரிதைத் திரைப்படத்தை இணைந்து தயாரிக்கிறார் தோனி. இந்தப் படம் நிறைய தாமதம் அடைந்தாலும், அதற்குள்ளாகவே ரூ.30 லட்சம் தோனிக்கு இதன் மூலம் வருவாய் கிட்டியுள்ளது” என்று கூறியுள்ளது. முதலிடம் பிடித்த குத்துச்சண்டை வீரர் மேவெதர் 300 மில்லியன் டாலர்கள் வருவாய் ஈட்டினார். கடந்த 4 ஆண்டுகளில் 3 முறை மேவெதர் போர்ப்ஸ் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து