எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கல்பாத்தி எஸ் அகோரம் வழங்கும் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் மோகன் ராஜா இயக்கும் “தனி ஒருவன்”
கல்பாத்தி எஸ் அகோரம் வழங்கும் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் மோகன் ராஜா இயக்கும் “தனி ஒருவன்”
நன்மைக்கும் தீமைக்கும் இடையே நடக்கும் போராட்டத்தை வித்தியாசமான கோணத்தில் புதுவிதமான திருப்பங்களை கொண்ட கதை அம்சத்துடன் தயாராகி இருக்கும் படமே “தனி ஒருவன்”. ஜெயம், சந்தோஷ் சுப்புரமணியம், வேலாயுதம் உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கிய மோகன் ராஜா தனது கனவு படமாக “தனி ஒருவன்” படத்தை இயக்கியுள்ளார். வெற்றிக்கூட்டணியான மோகன் ராஜா – ஜெயம் ரவி இணையும் ஆறாவது படம் இது.
ஜெயம் ரவி கதாநாயகனாகவும், நயன்தாரா கதாநாயகியாகவும் நடிக்க அரவிந்த் சாமி இதுவரை நடித்திராத முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். யாரும் நடித்திராத ஒரு புது கதாபாத்திரத்தில் தம்பி ராமைய்யா நடிக்க, உடன் கணேஷ் வெங்கட்ராமன், நாசர் மற்றும் பலர் நடித்துள்ளனர். மேற்கிந்திய இசையில் புதிய பரிமானத்தை அளிக்கும் ஹிப் ஹாப் தமிழா புகழ் ஆதி இப்படத்திற்க்கு இசை அமைத்துள்ளார். பொதுவாக துள்ளல் இசைக்கு மட்டும் பயன்படுத்தபட்ட ராப் இசையை, நல்ல கருத்துக்கள் கொண்ட வரிகளுக்கு உணர்ச்சிகளை உத்வேகம் படுத்தும் வகையில் ஹிப் ஹாப் இசையை கையாண்டுள்ளார். இசை பிரியர்களுக்கு இது ஒரு புது அனுபவமாக இருக்கும்.
இப்படத்தின் இன்னொரு தனியம்சம் யாதெனில், இப்படத்திற்கு ஒளிப்பதிவை செய்த ராம்ஜி, படத்தின் கதையை கேட்டவுடன், இப்படத்தை ஃபிலிம் தொழில்நுட்பத்தில் ஒளிப்பதிவு செய்தால் சிறப்பாக இருக்கும் என்று கூற ஃபிலிம் தொழில்நுட்பத்திலேயே படமாக்கப்பட்ட்து. மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக இப்படத்தை ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட சார்பாக கல்பாத்தி S அகோரம், கல்பாத்தி S கணேஷ், கல்பாத்தி S சுரேஷ் தயாரித்துள்ளார். படத்தொகுப்பை கோபி கிருஷ்ணாவும், கலை இயக்கத்தை வி. செல்வகுமாரும் மேற்கொண்டுள்ளனர். டெஹரடூன், மசூரி, கோவா, பேங்காக் போன்ற பகுதிகளில் படமாக்க பட்ட தனி ஒருவன், தற்போது படபிடிப்பு முழுவதும் முடிந்து இறுதிகட்ட மும்முரமாக நடைபெற்று வருகிறது.
வெகு சிறப்பாக வந்திருக்கும் “தனி ஒருவன்” படத்தின் இசை, இப்படத்தின் வெற்றியை மேலும் உறுதியடைய செய்துள்ளது என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார் இயக்குனர் மோகன் ராஜா. இப்படத்தின் இசை ஜுலை 15ம் தேதியும், படம் ஆகஸ்ட் மாதமும் வெளியீட திட்டமிடப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்:
கதை, திரைக்கதை வசனம் – மோகன் ராஜா, வசனம் – சுபா மற்றும் மோகன் ராஜா,
இசை – ஹிப் ஹாப் தமிழா ஆதி, ஒளிப்பதிவு – ராம்ஜி, படத்தொகுப்பு – கோபி கிருஷ்ணா,
கலை – வி. செல்வகுமார், நடனம் – பிருந்தா, சண்டைப்பயிற்சி – ஸ்டண்ட் சில்வா மற்றும் திலிப் சுப்பராயன்,
மக்கள் தொடர்பு - நிகில், தயாரிப்பு நிர்வாகம் – S மாரியப்பன், நிர்வாக தயாரிப்பு - SM வெங்கட் மாணிக்கம்
தயாரிப்பு – கல்பாத்தி S அகோரம், கல்பாத்தி S கணேஷ், கல்பாத்தி S சுரேஷ்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 months 1 day ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 3 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-11-2024.
25 Nov 2024 -
நிறங்கள் மூன்று விமர்சனம்
25 Nov 2024துருவங்கள் பதினாறு படம் மூலம் திரையுலகை திரும்பிப் பார்க்க வைத்த இயக்குநர் கார்த்திக் நரேன் அதன் பிறகு அவர் இயக்கத்தில் வெளியான மாறன் மற்றும் மாபியா சாப்டர் ஒன் ஆகிய பட
-
லைன்மேன் விமர்சனம்
25 Nov 2024மின்சாரம் மற்றும் பொறியியல் கண்டுபிடிப்புகளை கையாளும் சுப்பையா மற்றும் அவரது மகன் செந்தில் ஆகியோரின் வாழ்க்கையை பற்றி பேசுகிறது இப்படம்.,
-
தங்கம் விலை குறைவு
25 Nov 2024 -
ஜீப்ரா விமர்சனம்
25 Nov 2024தெலுங்கில் தயாரிக்கப்பட்டு பல்வேறு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி இருக்கும் படம் ஜீப்ரா.
-
எனக்கு தொழில் ரொமான்ஸ் விமர்சனம்
25 Nov 2024அசோக் செல்வன் தற்பொழுது எனக்குத் தொழில் ரொமான்ஸ் படம் மூலம் மீண்டும் களத்தில் குதித்து இருக்கிறார்.