முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லோதா கமிட்டி பரிந்துரை குறித்து ஆய்வு செய்யும் கிரிக்கெட் வாரிய செயற்குழுவில் கங்குலி

திங்கட்கிழமை, 20 ஜூலை 2015      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி: ஐ.பி.எல் கிரிக்கெட்டில் நடந்த முறைகேடு குறித்து நீதிபதி லோதா தலைமையிலான கமிட்டி அளித்த பரிந்துரையில் சென்னை சூப்பர் கிங்ஸ்அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் 2ஆண்டுகள்  ஐ.பி.எல் போட்டிகளில் ஆட தடை விதித்து இருந்தது.
லோதா கமிட்டியின் இந்த பரிந்துரைகளை செயல்படுத்துவது குறித்துஇந்திய கிரிக்கெட் வாரியம் ஒரு செயற்குழுவை நியமித்துள்ளது.

இந்த குழுவிற்கு ஐ.பிஎல் போட்டியின் சேர்மன் ராஜீவ் சுக்லா தலைவராக இருக்கிறார்.இந்த குழுவில் இந்திய கிரிக் கெட் வாரியத்தின் செயலாளர் அனு ராக் தாகுர் மற்றும் பொருளாளர் அனிருத் சவுத்ரி ஆகியோர் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர். இந்த குழுவில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் காப்டன் சவுரவ் கங்குலியும் உறுப்பினராக இடம் பெற்றுள்ளார். இந்த குழுவிற்கு இந்திய கிரிக் கெட் வாரியத்தின் சட்ட ஆலேசாகர் யு.என் பானர்ஜி உதவி செய்வார்.

ஐ.பி.எல் போட்டியில் நடந்த முறைகேடு குறித்து அறிக் கை தாக்கல் செய்ய நீதிபதி லோதா கமிட்டியை சுப்ரீம் கோர்ட் நியமித்தது. இந்த கமிட்டியின் அறிக் கையை ஆய்வு செய்வதற்கு இந்திய கிரிக் கெட் வாரியம் நியமித்துள்ள செயற் குழு 6வார கால அவகாசத்தினை எடுத்துகொள்கிறது.லோதா கமிட்டியின் அறிக் கையால் ஏற்படும் விளைவுகள் குறித்து கிரிக் கெட் வாரிய செயற்குழு ஆய்வு செய்கிறது. இந்த குழு தனது அறிக் கையை நிறைவு செய்வதற்கு முன்னர் பல்வேறு சட்ட ஆலோசகர்களின் கருத்துகளையும் கேட்கிறது. இந்த குழு தனது அறிக்கையை தாக்கல் செய்த பின்னர் சட்ட சிக்கல்  ஏதும் வரக்கூடாது என்பதற்காக சட்ட ஆலோசகர்களின் ஆலோசனைகளை  கிரிக் கெட் வாரிய செயற்குழு கேட்கிறது.

செயற்குழு அளிக்கும் அறிக்கையை தொடர்ந்து ஐ.பி.எல் 9வது ஆண்டு போட்டி குறித்து முடிவு செய்யப்படும் என சுக்லா தெரிவித்தார். மும்பையில் ஞாயிற்றுக்கிழமையன்று ஐ.பி.எல் நிர்வாகக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் லோதா கமிட்டியின் உத்தரவு குறித்து விவாதிக்கப்பட்டது.சென்னை சூப்பர் கிங்ஸ் அணியையும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியையும் 2ஆண்டுகள் ஐ.பி.எல் போட்டிகளில் ஆடுவதற்கு தடை விதித்து லோதா கமிட்டி உத்தரவிட்டிருந்தது.

இது குறித்தும் ஐ.பி.எல் நிர்வாகக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. வரவிருக்கும் ஐ.பி.எல் போட்டியில் குறைந்த பட்சம் 8 அணிகள் இடம் பெற்றிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. லோதா கமிட்டியின் அறிக் கையை இந்திய கிரிக் கெட் வாரியம் அமல் படுத்துகிறது.எனவே தற்போதைய கிரிக் கெட் வாரிய செயற்குழு ஐ.பி.எல் 9வது போட்டிக்கான ஏற்பாடுகளை செய்வது குறித்து விவாதிக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து