முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சவுதியில் தமிழக பெண்ணின் கை துண்டிக்கப்பட்ட சம்பவம்: சுஷ்மா கண்டனம்

வெள்ளிக்கிழமை, 9 அக்டோபர் 2015      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி - சவுதியில் வீட்டு வேலைக்காகச் சென்ற தமிழகப்பெண்ணின் கை துண்டிக்கப்பட்ட சம்பவம் ஏற்றுக் கொள்ள முடியாதது என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் மூங்கிலேறி கிராமத்தை சேர்ந்த கஸ்தூரி முனிரத்தினம் (55), கடந்த 3 மாதங்களுக்கு முன் வீட்டு வேலைக்காக சவுதி அரேபியாவுக்கு சென்றார். அங்கு உள்ளூர் அதிகாரிகள் வெளிநாட்டு ஊழியர்களின் நிலை குறித்து வீடுவீடாக சென்று ஆய்வு நடத்தியபோது, தனது முதலாளி தன்னை சித்ரவதை செய்வதாக அவர்களிடம் கஸ்தூரி முறையிட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த முதலாளி, கஸ்தூரியின் வலதுகையை வெட்டியுள்ளார். தற்போது ஆபத்தான நிலையில் கஸ்தூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.இதுகுறித்து தகவல் அறிந்த கஸ்தூரியின் உறவினர்கள் அவரை தமிழகத்திற்கு மீட்டுக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக சுஷ்மா சுவராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ளார்.

அதில் அவர், சவுதியில் வீட்டு வேலைக்காகச் சென்ற தமிழக பெண்ணின் கை வெட்டப்பட்ட சம்பவம் ஏற்றுக் கொள்ள முடியாதது. இது தொடர்பாக சவுதி அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளோம் எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக இந்த சம்பவத்திற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகமும் தனது கடும் கண்டனங்களைத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்