முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கையை பிளவுபடுத்த அனுமதிக்க மாட்டேன்: அதிபர் சிறிசேனா உறுதி

சனிக்கிழமை, 30 ஏப்ரல் 2016      உலகம்
Image Unavailable

கொழும்பு, இலங்கையை இரண்டாக பிரிக்க ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன் என்று அந்த நாட்டு அதிபர் மைத்ரி பால சிறிசேனா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் புதிய அரசமைப் புச் சட்டம் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போதைய நாடாளுமன்றம் அரசமைப்பு சட்ட நிர்ணய சபையாக மாற்றப்பட்டுள்ளது. சபாநாயகர் தலைமையில் உயர்நிலை குழு அமைக்கப்பட்டு கருத்துக் கணிப்பு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மக்களின் ஆலோச னைகளின்பேரில் புதிய அரச மைப்பு சட்டம் வரையறுக்கப்பட உள்ளது. இந்நிலையில் இனப்பிரச்சி னைக்கு தீர்வாக வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து சுயாட்சியுடன் கூடிய அரசாட்சி முறையை ஏற்படுத்த வேண்டும் என்று வடக்கு மாகாண சபையில் அண்மையில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. இதற்கு சிங்கள கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்த விவகாரம் தொடர்பாக அதிபர் மைத்ரிபால சிறிசேனா கொழும்பில் நிருபர்களிடம் கூறியதாவது:

இலங்கையை இரண்டாகப் பிளவுபடுத்துவதற்கோ, தேசத்தின் இறையாண்மையைப் பாதிக்கும் செயல்பாடுகளை முன்னெடுப் பதற்கோ அரசு ஒருபோதும் இடமளிக்காது. இதனை மீறும் எந்தவொரு வரைவுக்கும், தீர்மானத்துக்கும் அரசு ஆதரவு வழங்காது. இனப்பிரச்சினைக்கு தனிநாடு தான் தீர்வு என்று தமிழக அரசியல் தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் தேர்தலை கருத்திற் கொண்டு இவ்வாறு பிரச்சாரம் செய்கி றார்கள். இதை பெரிதுபடுத்த வேண்டிய அவசியமில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்