முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துருக்கியில் ஐ.எஸ். தற்கொலைப்படை தீவிரவாதி போலீசாரால் சுட்டுக்கொலை

வியாழக்கிழமை, 20 அக்டோபர் 2016      உலகம்
Image Unavailable

அங்காரா : துருக்கியில் தற்கொலை தாக்குதல் நடத்த திட்டமிட்ட ஐ.எஸ். தீவிரவாதி என்று சந்தேகிக்கப்படும் நபரை போலீசார் சுட்டுக்கொன்றனர்.

துருக்கியின் தெற்கு எல்லைப்பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் தாக்குதல் நடத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழிக்கும் பணியில் துருக்கி அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபடுகிறது. அதேசமயம், சிரியாவில் துருக்கி ஆதரவு கிளர்ச்சிப் படையினர், தீவிரவாதிகள் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக அங்காராவின் புறநகர்ப் பகுதியில் நேற்று அதிகாலையில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையின்போது ஐ.எஸ். தீவிரவாதி என்று சந்தேகிக்கப்படும் நபரை போலீசார் சுட்டுக்கொன்றனர். ஒரு பெரிய கட்டிடத்தின் 9-வது மாடியில் பதுங்கியிருந்த தீவிரவாதியை சரண் அடையும்படி போலீசார் கூறினர். ஆனால் அவன் சரண் அடையாமல் துப்பாக்கியால் சுட்டதால் போலீசார் பதிலடி கொடுத்தனர். இந்த சண்டையில் தீவிரவாதி இறந்துவிட்டான். அவனிடம் இருந்து வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதி தற்கொலை தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும், பழைய பாராளுமன்ற கட்டிடம் மற்றும் அனித்கபீர் நினைவிடத்தைச் சுற்றி உளவு பார்த்ததாகவும் கவர்னர் எர்கான் டோபாகா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

துருக்கி குடியரசு தினமான அக்டோபர் 29 அல்லது நவீன துருக்கி நிறுவனர் அதாதுர்க் நினைவு நாளான நவம்பர் 10-ம் தேதி அன்று நடைபெறும் நிகழ்ச்சிகளின்போது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருக்கலாம் என கவர்னர் கூறியதாக அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்