முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பரமக்குடி சம்பவம்: நீதி விசாரணை அறிக்கை வந்தபிறகு தான் நடவடிக்கை: ஜெயலலிதா அறிவிப்பு

புதன்கிழமை, 14 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப். - 15 - பரமக்குடி சம்பவம் குறித்து நீதி விசாரணை அறிக்கை வந்தபிறகு தான் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா கூறினார். தமிழக​ சட்டசபை நடவடிக்கை நேற்று காலை 10 மணிக்கு துவங்கியதும், சபாநாயகர் ஜெயக்குமார் திருக்குறள் வாசித்தார். திருக்குறள் வாசிப்பு நிகழ்ச்சி முடிந்ததும், தி.மு.க.வினர் சபாநாயகருக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து 5வது நாளாக இவர்கள் இப்படி வெளிநடப்பு செய்கின்றனர்.  அதன்பிறகு அரக்கோணத்தை அடுத்த சித்தேரியில் நடந்த ரயில் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்தும், காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய வேண்டும் என்றும் சபாநாயகர் ஜெயக்குமார் தீர்மானம் வாசித்தார். இரங்கல் தீர்மானம் முடிந்ததும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, புதிய தமிழகம், பா.ம.க. ஆகிய கட்சிகள் சார்பில் பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து பேச அனுமதி கேட்டனர். சபாநாயகர் ஜெயக்குமார் இதற்கு அனுமதி வழங்கவில்லை. இதையடுத்து 4 கட்சிகளைச் சேர்ந்தவர்களும் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, பா.ம.க., புதிய தமிழகம் கட்சிகளின் உறுப்பினர்கள்  வெளிநடப்பு செய்தபின்னர், செ.கு. தமிழரசன் (குடியரசு கட்சி) பேசினார். அவர் பேசும்போது, பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தையடுத்து அங்கு அமைதி ஏற்படுவதற்கான அனைத்து நடவடிக்கையையும் முதல்வர் எடுத்து வருகிறார். இது குறித்து சபையில் விளக்கம் அளித்தால் நன்றாக இருக்கும் என்றார்.  இதையடுத்து முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:​ பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக டி.ஆர்.ஓ. விசாரணை நடத்த நான் உத்தரவிட்டு இருந்தேன். டி.ஆர்.ஓ. விசாரணை நடத்தியிருந்தால் இதற்குள் அறிக்கை வந்திருக்கும். அதன் அடிப்படையில் உடனே நடவடிக்கை எடுத்திருக்க முடியும். ஆனால் எதிர்க்கட்சிகள் தான் ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு nullநீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கவேண்டும் என்று வற்புறுத்தினார்கள். விசாரணை கமிஷனுக்கு உத்தரவிட்ட பிறகு அவர்கள் அறிக்கை வந்த பிறகுதான் அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். அவர்கள் அளிக்கும் பரிந்துரைபடிதான் உதவித் தொகையும் அதிகரித்து கொடுக்கமுடியும். nullநீதி விசாரணை அறிவித்திருப்பதால் அதன் அறிக்கை வரும் வரை வேறு எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. அறிக்கை வந்த பிறகு யார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

முன்னதாக சட்டசபையில் இருந்து வெளி நடப்பு செய்ததற்க்கான காரணம் குறித்து சட்டசபைக்கு வெளியே சவுந்தரராஜன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு) கூறியதாவது:​ பரமக்குடியில் அப்பாவி மக்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி இருக்கிறார்கள். இதற்கு காரணமான போலீசார் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்களை சஸ்பெண்டு செய்ய வேண்டும். தலித் மக்கள் ஆயிரம் பேரை வீடு வீடாக சென்று கைது செய்து அவர்கள் மீது பொய் வழக்கு போட்டிருக்கிறார்கள். உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு கூடுதல் நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும். இதையெல்லாம் முதல்வரின் கவனத்துக்கு கொண்டுவருவதற்காக சபையில் பேச அனுமதி கேட்டோம். சபாநாயகர் அனுமதி மறுத்துவிட்டார். எனவே நாங்கள் வெளி நடப்பு செய்துவிட்டோம். 

ஆறுமுகம் (இந்திய கம்யூனிஸ்டு) கூறியதாவது:​ பரமக்குடியில் 7 தலித்துகள் சுட்டுக்கொல்லப்பட்டு இருக்கிறார்கள். துப்பாக்கி சூடு நடத்திய போலீசாரை தற்காலிக பணி நீnullக்கம் செய்ய வேண்டும். மிருகம் தாக்கி இறந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் கொடுக்கிறார்கள். ஆனால் இங்கு மனித உயிர்கள் அநியாயமாக பழி வாங்கப்பட்டு உள்ளது. எனவே நஷ்டஈடு அதிகமாக கொடுக்க வேண்டும். இந்த சம்பவத்துக்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். சமாதான கமிட்டி அமைக்க வேண்டும். தென் மாவட்டங்களில் கலவரம் ஏற்படும் சூழ்நிலையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கருத்துக்களை பேச அனுமதிக்காததால் வெளிநடப்பு செய்தோம். 

புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ண சாமி கூறியதாவது:​ துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த 17 பேரையும் மதுரையில் சந்தித்து ஆறுதல் கூறினேன். அவர்கள் நிலைமை பரிதாபமாக உள்ளது. அப்பாவி மக்கள் 1000 பேர் மீது வழக்கு போட்டு கைது செய்து இருக்கிறார்கள். 7 உயிர்கள் பறிக்கப்பட்டு உள்ளன. அவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ. 5 லட்சமாவது கொடுக்க வேண்டும். அமர்வு nullநீதிமன்ற nullநீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும். சம்பந்தப்பட்ட டி.எஸ்.பி., எஸ்.பி. ஆகியோரை தற்காலிக பணி நீnullக்கம் செய்ய வேண்டும். இது தொடர்பாக போராட்டம் நடத்த திட்டமிட்டு உள்ளோம். பா.ம.க. எம்.எல்.ஏ. கலையரசனும் இதே காரணத் துக்காக வெளிநடப்பு செய்ததாக நிருபர்களிடம் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 4 weeks ago