முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குடும்ப அரசியலால் ரங்கசாமி விரைவில் வீழ்ச்சி அடைவார்

வெள்ளிக்கிழமை, 7 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

 

புதுச்சேரி, அக்.7 - தமிழகத்தில் குடும்ப அரசியல் நடத்திய தி.மு.க. யி  தலைவர் கருணாநிதி, பா.ம.க. ராமதாஸ் ஆகியோருக்கு இன்று ஏற்பட்டுள்ள நிலைதான் புதுவையில் ரங்கசாமிக்கும் ஏற்படும் என்று தமிழக அமைச்சர் எம்.சி.சம்பத் கூறினார். 

புதுவை இந்திரா நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் சுத்துக்கேணி பாஸ்கரனை ஆதரித்து தமிழக அமைச்சர் எம்.சி.சம்பத் முத்திரையர்பாளையத்தில் பிரச்சாரம் செய்தார். 

இதில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் செம்மலை எம்.பி., மாநில செயலாளர் அன்பழகன் எம்.எல்.ஏ., பேரவை செயலாளர் ஓம்சக்தி சேகர் எம்.எல்.ஏ., மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பெரியசாமி, புருசோத்தமன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

இதில் தமிழக அமைச்சர் எம்.சி.சம்பத் பேசும்போது, இந்திரா நகர் தொகுதியில் இன்று இடைத்தேர்தல் நடைபெறுவதற்கு ரங்கசாமியந் பேராசை தான் காரணம். அவர் 2 தொகுதியில் போட்டியிட்டது தான் காரணம். புதுவை மக்களின் வரிப்பணம் வீணாக்கப்படுவதற்கு அவர்தான் பதில் சொல்ல வேண்டும். 

தமிழகத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி நடத்திய குடும்ப அரசியல், பா.ம.க. ராமதாஸ் மகனை வைத்து நடத்திய குடும்ப அரசியால், இவர்களுக்கு மிகப்பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது. அதே நிலைதான் அண்ணன் மகனை வைத்து குடும்ப அரசியல் நடத்தும் ரங்கசாமிக்கும் ஏற்படும். இந்த தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெறுவதன் மூலம் தன்னிச்சையாக செயல்படும் ரங்கசாமிக்கு கடிவாளம் போட்டது போல ஆகும் என்று அவர் குறிப்பிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்