முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெலுங்கு -கன்னட மக்கள் எல்லா வளங்களும் பெற்று வாழ வேண்டும் : முதல்வர் பழனிசாமி "யுகாதி தின" வாழ்த்து

செவ்வாய்க்கிழமை, 28 மார்ச் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை  - பேசும் மொழி வேறாய் இருந்தாலும், வாழும் இடம் ஒன்று என்ற உணர்வுடன், தமிழக மக்களோடு நல்லுறவை பேணி வாழ்ந்துவரும் தெலுங்கு மற்றும் கன்னட மக்களுக்கு, முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி, யுகாதி தின வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தப் புத்தாண்டில் எல்லா வளங்களும், நலங்களும் பெற்று சிறப்புடன் வாழவேண்டும் என யுகாதி தின வாழ்த்துச் செய்தியில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சர்  எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டுள்ள "யுகாதி தின" வாழ்த்துச் செய்தியில், தமிழகத்தில் வாழும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் தமது இனிய புத்தாண்டு திருநாளாம் "யுகாதி" திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழிகாட்டுதலின்படி செயல்படும் தமிழ்நாடு அரசு, மொழி பாகுபாடின்றி தமிழகத்தில் வாழும் அனைத்து மக்களும் பயன்பெற பல்வேறு நலத்திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருவதால், பன்மொழி பேசும் மக்களும் சகோதரத்துவத்தோடு ஒற்றுமையாக வாழும் பெருமையுடன் தமிழ்நாடு விளங்குகிறது -

தமிழகத்தில் வாழும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள், தங்கள் பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் பேணிக் காத்திடும் அதேவேளையில், பல நூற்றாண்டுகளாக தமிழ் மக்களோடு இணைந்து தொழில், வணிகம் போன்ற பல்வேறு துறைகளில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு, தமிழ் மக்களின் இன்ப துன்பங்களில் பங்கேற்று ஒற்றுமையுடன் வாழ்ந்து வருவது பாராட்டுக்குரிய தாகும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

 பேசும் மொழி வேறாய் இருந்தாலும், வாழும் இடம் ஒன்று என்ற உணர்வுடன், தமிழக மக்களோடு நல்லுறவைப் பேணி இனிதே வாழ்ந்து வரும் தெலுங்கு மற்றும் கன்னட மக்கள், இப்புத்தாண்டில் எல்லா வளங்களையும், நலங்களையும் பெற்று சிறப்புடன் வாழ வேண்டுமென்று வாழ்த்தி, அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை தமது இனிய "யுகாதி" திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்வதாக முதலமைச்சர்  எடப்பாடி கே. பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்