முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூ.8.15 கோடி மதிப்பீட்டில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் சக்கராப்பள்ளி வாய்க்கால்கள் தூர் வாரும் பணி : செய்தியாளர்களுடன் சென்று கண்காணிப்பு பொறியாளர் செல்வராஜ் ஆய்வு

செவ்வாய்க்கிழமை, 28 மார்ச் 2017      தஞ்சாவூர்
Image Unavailable

தஞ்சாவூர் மாவட்டம், பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு சார்பில் ரூ.8.15 கோடி மதிப்பீட்டில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் சக்கராப்பள்ளி வாய்க்கால்கள் தூர் வாரும் பணியை செய்தியாளர்கள் பயணத்தில் கீழ்காவிரி வடிநில கண்காணிப்பு பொறியாளர் வி.செல்வராஜ் அவர்கள நேற்று (28.03.2017) ஆய்வு மேற்கொண்டார்.

பாசன பகுதி

தஞ்சாவூர் மாவட்டம், பொதுப்பணித்துறை நீர் வள ஆதார அமைப்பு சார்பில் ரூ.8.15 கோடி மதிப்பீட்டில் தஞ்சாவூர் டெல்டா பகுதியான ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பாபநாசம், கும்பகோணம், பேராவூரணி, பூதலூர், திருவையாறு, ஆகிய பகுதிகளை உள்ளிட்ட பாசனப் பகுதியில் தூர் வாரப்படவுள்ளது.

 

தமிழ்நாட்டில் உள்ள நீர்நிலைகள் பயனீட்டாளர்களின் பங்களிப்புடன் நீர்நிலைகளை புனரமைத்திடும் 100 கோடி மதிப்பீட்டிலான குடி மராமத்து திட்டப் பணிகளை தொடங்கி வைத்திடும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கடந்த 13.03.32017 அன்று காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டம், மணிமங்கலம் கிராமத்தில் உள்ள ஏரியில் குடிமராமத்து திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்கள். அன்றைய தினம் மாவட்டந்தோறும் குடிமராமத்து பணிகள் செயல்பாடுகள் குறித்து செய்தியாளர்கள் பயணம் மேற்கொண்டு நேரில் பார்வையிட்டும், பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டில் உள்ள ஏரி, குளம், கால்வாய்களை பொது மக்களின் பங்களிப்போடு குடி மராமத்து பணிகள் செய்வது தான் குடிமராமத்து பணிகள் திட்டமாகும்.

 

இந்த திட்டத்தில் முதல் கட்டமாக தமிழ்நாடு அரசு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்து நடப்பு நிதியாண்டில் பணிகள் மேற்கொள்ள ஆணையிட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் 116 குடிமராமத்து பணிகள் மேற்கொள்ள ரூ.8.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த 13.03.30217 அன்று மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, தலைiயில் , பாராளுமன்ற உறுப்பினர்கள் கு.பரசுராமன், ஆர்.கே.பாரதிமோகன், தஞ்சாவூர் சட்ட மன்ற உறுப்பினர் எம்.ரெங்கசாமி, ஆகியோர்களால் பாபநாசம் வட்டம், பசுபதி கோவில் பாசன வாய்க்கால் தூர்வாரும் பணியை தொடங்கி வைக்கப்பட்டு, பணிகள் விரைந்து நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக பாபநாசம் வட்டம், அய்யம்பேட்டை-சக்கராப்பள்ளி வாய்க்கால் 2800 மீட்டர் நீளத்திற்கு தூர்வாரப்பட்டு வருகிறது. இதன் மூலம் 680 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும், ரெகுநாதபுரம் வாய்க்கால், 2900 மீட்டர் நிளத்தில் தூர்வாரப்படவுள்ளது. இதனால் 386 ஏக்கர் பாசன நிலங்கள் பயன் பெறும்.

 

இப்பணிகள் மூலம் வாய்க்கால் கரைகளில் உள்ள முட்செடிகள் அகற்றப்படுதல், வாய்க்கால் தூர்வாரப்படுதல், வாய்க்காலில் உள்ள உடைந்து போன மதகுகள் புதிதாக கட்டப்படுதல், மதகுகளில் உள்ள உடைந்து போன மதகு பலகைகள் மாற்றியமைக்கப்பட்டு புதிய திருகு மதகுகள் பொருத்தப்படுதல், வாய்க்காலின் இருபுறமும் கரைகள் பலப்படுத்துதல், தடுப்பு சுவர் அமைத்தல், போன்ற பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. மேற்கண்ட பணிகள் மேற்கொள்வதால், தஞ்சாவூர் டெல்டா பாசனப் பகுதி கடைகோடியில் உள்ள பாசன நிலங்களும் தண்ணீர் தட்டுப்பாடின்றி கிடைக்கும். தண்ணீர் விரயமாவது தடுக்கப்படும். நீர் அதிக அளவில் சேமிக்கப்படும். அதிக அளவில் விவசாய நிலங்கள் பயிர் செய்ய பயனுள்ளதாக இருக்கும்.

 

அதன் அடிப்படையில், காவிரி வடிநில கோட்டம், தஞ்சாவூர் காவிரி உப கோட்டம், தஞ்சாவூர் காவிரி நீரளவு பிரிவு, தஞ்சாவூர் பிரிவில் உள்ள வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டும், முட்புதர்கள், சீமை கருவேல மரங்கள் வேருடன் அகற்றுதல், கால்வாயில் வண்டல் மண் தேங்கியுள்ள இடங்களில் தூர் வாருதல், கால்வாயில் பலவீன இடங்களில் மண் கொட்டி பலப்படுத்துதல், கரைகள் பலப்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை கீழ்காவிரி வடிநில கோட்டம் செயற்பொறியாளர் ஏ.முகமது இக்பால், காவிரி வடிநில உபகோட்டம் உதவி செயற்பொறியாளர் எம்.இளங்கோ, காவிரி நீரளவு பிரிவு உதவி பொறியாளர் வி.சிவக்குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.சிங்காரம், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) போ.சுருளிபிரபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்