முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேலூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 17 பயனாளிகளுக்கு ரூ.3 லட்சத்து 40 ஆயிரத்திற்கான நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் சி.அ.ராமன், வழங்கினார்

திங்கட்கிழமை, 17 ஏப்ரல் 2017      வேலூர்
Image Unavailable

வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலுள்ள காயிதே மில்லத் அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சி.அ.ராமன், தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிலப்பட்டா புதிய குடும்ப அட்டை, பட்டாமாறுதல்இ வேலைவாய்ப்பு கடனுதவி நிதியுதவி இலவச வீட்டுமனைப்பட்டாஇ மாற்றுதிறனாளிகளுக்கு உதவிஇ முதியோர் உதவித் தொகைஇ காவல்துறை பாதுகாப்புஇ மின் இணைப்பு மற்றும் பொதுநல மனுக்கள் என 400 மனுக்களை வழங்கினர். இம்மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.இம்மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் சமூக பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் உடனடியாக நிதி உதவிகளை பெற இயலாத ஆதரவற்ற விதவைகள், மாற்றுத்திறனாளிகள், 30 வயதிற்கு மேற்பட்ட திருமணமாகாத பெண்கள் மற்றும் குணப்படுத்த இயலாத நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தாட்கோ நிறுவனத்தின் மூலம் தலா ரூ.20,000- வீதம் 17 பயனாளிகளுக்கு ரூ.3 இலட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளுக்கான காசோலைகளை கலெக்டர் சி.அ.ராமன், வழங்கினார்.இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மரு.தா.செங்கோட்டையன், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு) செல்வராஜ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ஜெயபிரகாஷ், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் பரமேஸ்வரிமாவட்ட வழங்கல் அலுவலர் வேணுசேகரன், தாட்கோ மாவட்ட மேலாளர் முரளிதரன், மற்றும் அனைத்து அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்