எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருப்பூர் மாவட்ட ஆட்சியரக அலுவலகக் கூட்டரங்கில், அவிநாசியில் அமைந்துள்ள அருள்மிகு அவிநாசிலிங்கேஸ்வரர் திருக்கோயில் தேர் திருவிழாவினை முன்னிட்டு மேற்கொள்ளப்படவேண்டிய முன்னேற்பாடுகள் குறித்த அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் சஜெயந்தி தலைமையில் நடைபெற்றது.
தேர்திருவிழா
திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் அமைந்துள்ள அருள்மிகு அவிநாசிலிங்கேஸ்வரர் திருக்கோயில் தேர் திருவிழா 30.04.2017 முதல் 11.05.2017 வரை சிறப்பான முறையில் நடைபெறவுள்ளது. 07.05.2017 மற்றும் 08.05.2017 ஆகிய நாட்களில் தேரோட்டம் நடைபெறுவதை முன்னிட்டு இந்த திருக்கோயில்களுக்கு பெருமளவில் பக்தர்கள் வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, மேற்படி விழாவின் போது எவ்வித அசம்பாவித சம்பவமும் நடைபெறாமல் பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் உரிய காவல் பாதுகாப்பு வழங்குவதுடன் இவ்விழாவின் போது கோவிலுக்கு வரும் பக்தர்களிடையே கூட்ட நெரிசலை தடுக்கும் விதமாக ஓர் ஒழுங்கு வரிசை ஏற்படுத்தி தேவைக்கேற்ப காவலர்கள், ஊர்காவல் படையினர் ஆகியோரை பணியில் அமர்த்தி சட்டம் மற்றும் ஒழுங்கு பராமரிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளல். மேற்படி விழாவின் போது கோயில்களுக்கு வாகனங்களில் வரும் பக்தர்களின் வாகனங்களை நிறுத்த போதிய அளவில் இடவசதி செய்தல். மேலும், வாகன போக்குவரத்தினை மாற்றி அமைப்பது தொடர்பாகவும், உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.
சுற்றுப்புற பகுதிகளை தூய்மையாக வைத்திடவும்
மேலும், தேர் திருவிழாவின் போது கோயில்களின் சுற்றுப்புற பகுதிகளை தூய்மையாக வைத்திடவும், திருக்கோயிலில் பக்தர்கள் கூடுகின்ற அனைத்து இடங்களையும் சுத்தம் செய்வதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். தேரோடும் வீதிகளை செப்பனிட்டும், பாலசந்தர் மருத்துவமனை மற்றும் தேரோடும் வீதிகளில் உள்ள மரக்கிளைகளை வெட்டி விட நடவடிக்கை மேற்கொள்ளல். தடையின்றி பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்தல், திருக்கோயில் வளாகத்தில் சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டிகள் ஆங்காங்கே வைத்து பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கல் மற்றும் தண்ணீர் வசதியுடன் கூடிய தற்காலிகமாக ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தேவையான கழிப்பறைகள் தனித்தனியாக அமைத்தல் மற்றும் தேவையான குப்பைத்தொட்டிகள் வைக்க வேண்டும். அப்பகுதிகளில் பொதுமக்கள் பயன்படுத்தும் நடைபாதையில் ஆக்கிரமணம் ஏற்படாது, காவல் துறையினர் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினருடன் இணைந்து கண்காணித்தல். மேலும், திருக்கோயில்களை சுற்றியுள்ள வீதிகளில் போதிய அளவு மின் விளக்குகள் மற்றும் குடிநீர் வசதிகள் மேற்கொள்ளல். திருக்கோயில்களை சுற்றியுள்ள தெருக்களை பேரூராட்சி அலுவலர்கள் செப்பனிடுதல் வேண்டும். மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து வரும் பொதுமக்கள் கோவிலுக்கு சிரமமின்றி வந்திட ஏதுவாக, சூழ்நிலைக்கேற்ப தேவையான அளவு சிறப்பு பேருந்துகளை இயக்கிட போக்குவரத்து அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
சுகாதாரம் பேணுதல்
மருத்துவம் மற்றும் பொது சுகாதார துறையினர் பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் பொது சுகாதாரம் பேணுதல் மற்றும் அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் போதிய அளவு மருந்துகள் இருப்பு வைப்பதோடு, மருத்துவர்கள் உட்பட அனைத்து பணியாளர்களும் பணியில் இருப்பதை உறுதிபடுத்திக் கொள்ளல். தேரோட்டத்தின் போது உரிய மருத்துவர்கள் குழுவினருடன் கூடிய ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று உடன் சுற்றி வரவேண்டும். தீ விபத்து ஏற்படாமல் தடுத்திடும் நோக்கில் தீயணைப்பு வாகனம் ஒன்று தயார் நிலையில் தண்ணீருடன் கோயில்களுக்கு அருகில் தீ தடுப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
மின்தடை ஏற்படா வண்ணம்
தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலர்கள் 30.04.2017 முதல்11.05.2017 வரை அப்பகுதியில் மின்தடை ஏற்படா வண்ணம் உரிய ஏற்பாடுகள் செய்தல். தேரோட்டத்தின் போது ரதவீதிகளில் குறுக்காகச் செல்லும் மின்கம்பிகளை தற்காலிகமாக தளர்த்திக்கொடுக்க வேண்டும். தேரோட்டம் முடிந்ததும் மீண்டும் மின் இணைப்பு கொடுக்க வேண்டும். இத்தேர்திருவிழாவிற்கு பெருமளவில் மக்கள் கூட வாய்ப்புள்ளது என்பதால், அப்பகுதியில் உள்ள மின்கம்பங்கள் மற்றும் மின்சார கம்பிகள் உறுதி தன்மையை தணிக்கை செய்து எவ்வித அசம்பாவித சம்பவங்கள் நிகழா வகையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும்.
ஆக்கிரமிப்புகள் அகற்றம்
நெடுஞ்சாலைத்துறையினர் தேரோடும் வீதிகளில் சாலையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள விளம்பர பலகைகள் அகற்றப்படவேண்டும் மற்றும் தேரோடும் சாலைகளில் உள்ள குழிகளை தார் போட்டு நிரப்பி செப்பனிட்டு மராமத்து பணிகள் செய்ய வேண்டும். தேர் திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு இடையே கூட்ட நெரிசல் ஏற்படாத வகையில் வரிசையில் சென்று சுவாமி தரிசனம் செய்யும் வகையில் உரிய மூங்கில் தடுப்புகளை பொதுப்பணித்துறை மற்றும் காவல் துறையினருடன் இணைந்து இந்து சமய அறநிலைத்துறையினர் மேற்கொள்ள வேண்டும். பொதுமக்களுக்கு எவ்வித சிரமமும் இன்றி சுவாமி தரிசனம் செய்ய உரிய அனைத்து ஏற்பாடுகள் செய்தல் மற்றும் அனைத்து பணிகளையும் கண்காணிக்க வேண்டும்.
மேலும், திருப்பூர் உதவி கலெக்டர் அனைத்து துறை சார்ந்த பணிகளையும் ஒருங்கிணைத்து கண்காணிப்பு பணி மேற்கொண்டு மேற்படி அவிநாசி அருள்மிகு அவிநாசிலிங்கேஸ்வரர் திருக்கோயில் தேர் திருவிழாவினை சீரிய முறையில் நடத்திட அனைத்து அலுவலர்களும் சிறப்பான முறையில் செயல்பட வேண்டும் என மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்கள்.
இந்நிகழ்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் ச.பிரசன்னா ராமசாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பெ.வெங்கடாசலம் , இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் ஹர்சினி, இணை இயக்குநர் பொது சுகாதாரம் மரு.விஜயகுமார், அவிநாசி வட்டாட்சியர் விவேகானந்தன், உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்18 hours 3 min ago |
ஸ்வீட் பால்.4 days 13 min ago |
உருளைக்கிழங்கு டோனட்6 days 23 hours ago |
-
சற்று உயர்ந்த தங்கம் விலை
30 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
இலங்கையில் அதிபர் தேர்தல் செப்.28 அல்லது அக்டோபர் 5-ல் நடத்தப்படும் : மக்கள் விடுதலை முன்னணி தலைவர் தகவல்
30 Apr 2024ஸ்டாக்ஹோம் : இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 28 அல்லது அக்டோபர் 5-ம் தேதி நடத்தப்படும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திச
-
மஹாராஷ்டிராவில் சாலை விபத்தில் 10 பேர் பலி
30 Apr 2024மும்பை : மஹாராஷ்டிராவில் பஸ்சும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.
-
சத்தீஷ்கரில் நடந்த என்கவுண்ட்டரில் நக்சலைட்டுகள் 7 பேர் சுட்டுக்கொலை
30 Apr 2024ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் அதிரடிப் படையினர் மற்றும் நக்சலைட்டுகள் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 7 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
-
இன்று மே தினம்: எடப்பாடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
30 Apr 2024சென்னை : மே 1 உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க .பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ரா.முத்தரசன், ராமதாஸ் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து
-
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ம் தேதி நடத்தக்கூடாது : டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
30 Apr 2024சென்னை : ஜூன் 1-ம் தேதி மக்களவைக்கான கடைசி கட்டத் தேர்தலுடன் இணைத்து விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலை நடத்த ஆணையம் தீர்மானித்திருந்தால் அந்த முடிவை கைவிட
-
ஏற்காட்டில் தனியார் பேருந்து விபத்தில் 4 பேர் உயிரிழப்பு
30 Apr 2024ஏற்காடு : ஏற்காடு மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர்.
-
மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கு: பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை
30 Apr 2024விருதுநகர், மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 36-வது முறையாக நீட்டிப்பு
30 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஜூன் 4-ம் தேதி வரை 36-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்பு : முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி கோரிக்கை
30 Apr 2024சென்னை : தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்படைந்துள்ளது.
-
அடுத்த 3 நாட்கள் வெப்ப அலை வீசும்: தமிழக வட உள்மாவட்டங்களில் இன்று வெப்பம் மேலும் உயரும்
30 Apr 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் வெப்ப அலை வீசும் என்று தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழக வட உள்மாவட்டங்களில் இன்று வெப்பம் 5 டிகிரி செல்சியஸ் வரை மேல
-
கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 9 வீரர்கள் பலி
30 Apr 2024பொகோடா : கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் 9 வீரர்கள் உயிரிழந்தனர்.
-
காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணி முழு செலவையும் ஏற்கிறது இந்தியா : இலங்கை தகவல்
30 Apr 2024கொழும்பு : காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணிக்கான மொத்த செலவையும் ஏற்க இந்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
30 Apr 2024நாகை : நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி அமைப்பினர் நடத்திய டிரோன் தாக்குதல்
30 Apr 2024சனா : செங்கடலில் பயணித்துக் கொண்டிருந்த அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
-
தமிழ்நாட்டிற்கு மேலும் தண்ணீர் திறக்க முடியாது : ஒழுங்காற்று குழு கூட்டத்தில் கர்நாடகா பிடிவாதம்
30 Apr 2024புதுடெல்லி : சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரியில் 95 டி.எம்.சி நீர் வழங்க வலியுறுத்தப்பட்ட நிலையில் தமிழ்நாட்டிற்கு மேலும்
-
ஒடிசா சட்டசபை தேர்தல்: முதல்வர் நவீன் பட்நாயக் வேட்புமனு தாக்கல்
30 Apr 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் ஹிஞ்சிலி சட்டசபை தொகுதியில் பிஜு ஜனதாதளம் கட்சி சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவரும், அம்மாநில முதல்வருமான நவீன் பட்நாயக் நேற்று தனது
-
கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக் கோரிய மனு தள்ளுபடி : சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
30 Apr 2024சென்னை : கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக்கோரிய மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
-
ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: கைதான 2 பேர் நேரில் ஆஜராக சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன்
30 Apr 2024சென்னை : ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் கைதான 2 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
-
பிரதமரின் வெறுப்பு பேச்சுகளால் பா.ஜ.க. படுதோல்வி அடைவது உறுதி : செல்வப்பெருந்தகை அறிக்கை
30 Apr 2024சென்னை : மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கிற, அரசமைப்புச் சட்ட விரோத வெறுப்பு பேச்சுகளை விரக்தியின் விளிம்பில் நின்று கொண்டு பிரதமர் மோடி தொடர்ந்து பேச பேச பா.ஜ.க.
-
உலக கோப்பை தொடர்: இங்கி.-தென்னாப்பிரிக்கா டி-20 அணிகள் அறிவிப்பு
30 Apr 2024லண்டன் : டி-20 உலக கோப்பை தொடருக்கான இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காஅணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இன்றைக்குள்....
-
அமேதி, ரேபரேலி வேட்பாளர்கள் குறித்து கார்கே முடிவு செய்வார் : காங்கிரஸ் அறிவிப்பு
30 Apr 2024புதுடெல்லி : அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்களை கார்கே முடிவு செய்வார் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.
-
விஸ்வரூபம் எடுக்கும் ஆபாச வீடியோ விவகாரம்: கர்நாடகா, ஹாசன் தொகுதி எம்.பி. பிரஜ்வால் ரேவண்ணா சஸ்பெண்ட்
30 Apr 2024புதுடெல்லி : கர்நாடக அரசியலில், மதசார்பற்ற ஜனதாதள கட்சியை சேர்ந்த ஹாசன் தொகுதி எம்.பி.
-
ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ்: விரைவில் விதிமுறைகளை வெளியிடுகிறது தமிழக அரசு
30 Apr 2024சென்னை : ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ் விண்ணப்பிக்க விதிமுறைகளை தமிழக அரசு விரைவில் வெளியிடுகிறது.
-
பெண்களுக்கு மாதம் ரூ.1500 பென்சன்: ஆந்திராவில் பா.ஜ. கூட்டணி தேர்தல் அறிக்கை வெளியீடு
30 Apr 2024அமராவதி : ஆந்திராவில் பெண்களுக்கு மாதம் ரூ.1500 பென்சன் உள்ளிட்ட வாக்குறுதிகள் அடங்கிய பா.ஜ.க. கூட்டணியின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.