முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவில்லிபுத்தூர் ஆண்டாள்திருக்கோவில் திருஆடிபூரத்தேரோட்ட விழா

வியாழக்கிழமை, 27 ஜூலை 2017      விருதுநகர்
Image Unavailable

   விருதுநகர்  -விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் உள்ள அருள்மிகு நாச்சியார் (ஆண்டாள்) திருக்கோவிலில் திருஆடிபூரத் திருத்தேரோட்டம் ஆண்டு தோறும் ஆடிமாதம் ஆண்டாள் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் ஆடிப்பூரத்திருவிழா கடந்த 19.07.17 அன்று கொடி ஏற்றத்துடன் துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது.
 விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 9-ம் நாளான  ஆடிப்பூரத்தேரோட்ட விழா காலை 8.05 மணிக்கு தொடங்கியது. மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் திரு.கே.டி.ராஜேந்திரபாலாஜி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சிவஞானம்.இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் திருத்தேரின் வடம்பிடித்து தேரோட்டத்தினை துவக்கி வைத்தார்கள். திருத்தேரானது கோவிலை சுற்றியுள்ள நான்கு ரத வீதிகளிலும் கோவிந்தா, கோபாலா என்ற கோஷத்துடன் வீதி உலா வந்தது.
 ஆடிப்பூரத்தேரோட்ட விழாவிற்கான முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் சிறப்பான முறையில் ஏற்பாடுகளை செய்திருந்தது. காவல்துறையின் மூலம் தேரோட்ட நிகழ்ச்சியில் பங்கேற்கும் பொதுமக்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. குற்றங்களைத் தடுக்க ஆங்காங்கே கண்காணிப்பு கேமிரா பொருத்தி கண்காணிகப்பட்டது. கூட்ட நெரிசலை தவிர்க்க போக்குவரத்தினை ஒழுங்குபடுத்தி மாற்றுப்பாதை ஏற்படுத்தப்பட்டிருந்தது. வருகின்ற பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்குத் தேவையான குடிநீர் வசதி மற்றும் சுகாதார வசதிகள் நகராட்சி நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
 இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள்  எம்.சந்திரபிரபா (திருவில்லிபுத்தூர்),  எஸ்.ஜி.சுப்பிரமணியன் (சாத்தூர்), மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  மு.ராசராசன், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் திருமதி.வசந்தி, இணை ஆணையர்  இரா.செந்தில்வேலவன், உதவி ஆணையர்  இரா.ஹரிஹரன், அறங்காவலர் குழுத்தலைவர்  கி.ரவிச்சந்திரன், செயல் அலுவலர்  சா.இராமராஜா, ஆய்வாளர்  து.பாண்டியன் உட்பட அரசு அலுவலர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து