முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நான் இன வெறியுடன் நடந்து கொண்டதில்லை: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்

திங்கட்கிழமை, 15 ஜனவரி 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன், நான் இன வெறியன் அல்ல. நீங்கள் என்னை பேட்டி காணும் போதெல்லாம் ஒரு போதும் சிறிதளவு கூட இன வெறியுடன் நடந்து கொண்டதில்லை என டிரம்ப் கூறினார்.

வெளியேற்ற...

வாஷிங்டன் வெள்ளை மாளிகை ஓவல் அலுவலகத்தில் ஜனாதிபதி டிரம்பை அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த 11-ந் தேதி சந்திக்க சென்று இருந்தனர். குடியேற்ற உடன்படிக்கை ஒன்றை உறுதி செய்வது தொடர்பாக, அவர்கள் பேசச்சென்று இருந்துபோது, அவர்கள் மத்தியில் பேசிய டிரம்ப், “அந்த ஆசனவாய் நாடுகளில் இருந்து வந்த மக்களை நாம் ஏன் இங்கே வைத்திருக்க வேண்டும்? அவர்களுக்கு பதிலாக நார்வே போன்ற நாடுகளில் இருந்து வருகிற குடியேறிகளை நாம் வைத்துக்கொள்ளலாமே? நமக்கு இன்னும் கூடுதலான ஹைதி நாட்டினர் எதற்காக வேண்டும்? அவர்களை வெளியேற்ற வேண்டும்” என்று கூறியதாக சர்ச்சை எழுந்து உள்ளது.

நான் இன வெறியன் அல்ல. நீங்கள் என்னை பேட்டி காணும் போதெல்லாம் ஒரு போதும் சிறிதளவு கூட இன வெறியுடன் நடந்து கொண்டதில்லை என்றார். - அதிபர் டொனால்டு டிரம்ப்

சர்ச்சைக்கு உரிய இந்த அவதூறு கருத்தை வெளியிட்டதற்காக ஜனாதிபதி டிரம்புக்கு எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி எம்.பி.க்கள் மட்டுமல்லாது, ஆளும் குடியரசு கட்சிஎம்.பி.க்களும் கண்டனம் தெரிவித்தனர். இந்த அவதூறு பேச்சுக்கு ஆப்பி ரிக்க யூனியனில் உள்ள 55 நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்தன.

இன வெறியன்....

ஆப்பிரிக்க நாடுகள் மீது டிரம்ப் தனது இனவெறியை காட்டியுள்ளார். இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத் தின. இதற்கு டிரம்ப் மறுத்து விட்டார். தான் உள் நோக்கத்துடன் பேசவில்லை என தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் ‘மேற்கு பால்ம் பீச்‘ பகுதியில் உள்ள டிரம்ப் சர்வதேச கோல்ப் கிளப்பில்  அவர் நிருபர்களை சந்தித்தார். அப்போது   நான் இன வெறியன் அல்ல. நீங்கள் என்னை பேட்டி காணும் போதெல்லாம் ஒரு போதும் சிறிதளவு கூட இன வெறியுடன் நடந்து கொண்டதில்லை என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து