முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திர மாநில முதல்வருக்கு கோயில் கட்டும் திருநங்கைகள்

சனிக்கிழமை, 21 ஏப்ரல் 2018      இந்தியா
Image Unavailable

கர்னூல்: ஆந்திர மாநில முதல்வராக இருக்கும் சந்திரபாபு நாயுடுவுக்கு கோயில் கட்ட முடிவு செய்திருக்கும் திருநங்கைகள், கோயிலுக்கான அடிக்கல்லை நாட்டி, கட்டுமானப் பணிகளை தொடங்கியுள்ளனர்.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு கோயில் கட்டி, அதில், அவரது வெள்ளி உருவச் சிலையை வைத்து வழிபட முடிவு செய்யப்பட்டுள்ளது.சமந்தா ஹிஜ்ரஸ் ஹக்குலா ஐக்கிய போராட்ட வேதிகா அமைப்பினர் நாண்டியால் பகுதியில் இந்த கோயிலை எழுப்ப உள்ளனர். உயிரோடு இருக்கும் ஒரு அரசியல் தலைவருக்காக ஆந்திராவில் கோயில் கட்டப்பட உள்ளது. கோயிலுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் ஆந்திர மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் பூமா அகிலா பிரியா, மாவட்ட கலெக்டர் சத்யநாராயணா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

ஆந்திராவில் வாழும் திருநங்கைகளின் வாழ்க்கை மேம்பட, திருநங்கைகளுக்கான ஓய்வூதிய திட்டம், இலவச வீடு மற்றும் இதர பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதல்வர் சந்திரபாபு நாயுடு ஏற்படுத்திக் கொடுத்தார். இந்த அளவுக்கு திருநங்கைகளுக்காக எந்த தலைவரும் சேவை செய்ததில்லை. அதனால், சந்திரபாபு நாயுடுவுக்கு சுமார் ரூ.30 லட்சம் மதிப்பில் கோயில் கட்ட திட்டமிட்டுள்ளோம். எங்கள் தெய்வம் சந்திரபாபுதான் என்று உணர்ச்சிப் பொங்க திருநங்கைகள் கூறினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து