முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இளவரசர் ஹாரி திருமணத்தில் பங்கேற்க இந்திய என்.ஜி.ஓ. பெண்ணுக்கு அழைப்பு

சனிக்கிழமை, 19 மே 2018      இந்தியா
Image Unavailable

மும்பை: இங்கிலாந்து இளவரசர் ஹாரியின் திருமணத்தில் பங்கேற்க இந்தியாவைச் சேர்ந்த மைனா மஹிளா என்ற என்.ஜி.ஓ.விற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து இளவரசர் ஹாரி-மெகன் திருமணம் நேற்று நடைபெற்றது. இவரது திருமணத்தில் இளவரசரின் ஆதரவாளர்கள் மற்றும் விருந்தினர்கள் என பல்வேறு நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இந்த திருமணமானது லிண்ட்சர் நகரில் நடைபெற்றது.

திருமண நிகழ்ச்சியை காண்பதற்காக கடந்த ஒருவாரமாக லிண்ட்சர் மாளிகை முன்பு சாலைகளில் கூடாரம் அமைத்து பலர் தங்கியிருந்தனர். இந்தத் திருமணத்திற்கு முக்கிய பிரமுகர்களுக்கு மட்டுமே அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு இருந்தது. 

அந்தவகையில், ஹாரியின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மும்பையைச் சேர்ந்த என்.ஜி.ஓ. ஒன்றிற்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

முன்னதாக இளவரசர் ஹாரி தனது திருமணத்தில் கலந்து கொள்ள வருபவர்கள் தங்களுக்கு திருமண பரிசு தருவதற்கு பதில் ஏழு தொண்டு நிறுவனங்களுக்கு உதவுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். அதனைத் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழு நிறுவனங்களில் ஒன்று தான் இந்த மும்பையைச் சேர்ந்த மைனா மஹிளாவும் ஒன்று.

மைனா மஹிளாவைத் தவிர மற்ற ஆறு நிறுவனங்களும் லண்டனில் இயங்கி வருபவை என்பது குறிப்பிடத்தக்கது.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் குடிசை பகுதியில் இருக்கும் சில பெண்களுடன் சேர்ந்து, சுஹானி என்ற இளம்பெண் ஆரம்பித்தது தான் இந்த மைனா மஹிளா எனும் அரசுசாரா அமைப்பு. இந்த அமைப்பின் நோக்கம் மாதவிடாய் சுகாதாரம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது தான். இளவரசர் ஹாரியின் திருமணத்தில் தனது தோழிகளுடன் சுஹானி பங்கேற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் மைனா மஹிளாவிற்கு அங்கீகாரம் மட்டுமல்ல, நிதி உதவியும் கிடைக்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து