முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

முந்திரி பழத்தின் மருத்துவ குணங்கள்

 

  1. முந்திரி பழம் உடலில் உள்ள நச்சுக்கிருமிகளை அழித்து கழிவுகளாக வெளியேற்ற உதவுகிறது. 
  2. முந்திரி பழத்தில் இதயத்திற்கு நன்மை தரக்கூடிய அமிலங்கள் அதிக அலவில் காணப்படுகின்றன,
  3. இதய நோய்கள் மற்றும் மாரடைப்பு வராமல் முந்திரி பழம் தடுக்கிறது. 
  4. முந்திரிப் பழமானது, நமது உடம்பின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து ஈறுகளில் ஏற்படும் ரத்தக் கசிவை தடுத்து நம் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
  5. முந்திரி பழ சாற்றினை பயன்படுத்துபவர்கள் ஆஸ்துமா உள்ளிட்ட சுவாசப் பிரச்சினைகளிருந்து நிவாரணம் பெறலாம்.
  6. முந்திரி பழத்தினை உண்ணும்போது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு குறைகிறது.
  7. நம்ஆரோக்கியத்திற்குத் தேவையான பாஸ்பரஸ், கால்சியம், மெக்னீசியம் போன்றவை முந்திரி பழத்தில் காணப்படுகின்றன.
  8. முந்திரி பழத்தினை உண்ணும்போது எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
  9. முந்திரி பழம் சருமத்தில் உண்டாகும் வீக்கம், அரிப்பு, சுருக்கம் மற்றும் வெடிப்பு ஆகியவற்றைப் போக்குகிறது.
  10. முந்திரி பழத்தினை உண்ணும்போது மலச்சிக்கல் தீரும். 
  11. முந்திரி பழத்தினை அடிக்கடி சாப்பிடுவதால் முடி உதிர்தல் குறையும். 
  12. முந்திரி பழத்தினை சாப்பிடுவதால் அல்சர் நோய் குறையும்.
  13. முந்திரி பழம் சாப்பிட நரம்புகள் பலம் பெறும்.
  14. முந்திரி பழம் சாப்பிட கண் நோய்களை குணமாக்கும்,பார்வை தெளிவடையும்.
  15. நமது உடலில் உள்ள எலும்புகளுக்கு தேவையானஅனைத்து சத்துக்களும் முந்திரி பழத்தில் இருப்பதால் எலும்புகள் மற்றும் பற்கள் வலுவாகும்.
  16. மாணவர்ககளின் ஞாபக சக்தியை ஊக்குவிக்கும் முந்திரி பழங்களை அடிக்கடி சாப்பிட்டு வருவது அவர்களுக்கு நன்மை பயக்கும்.
  17. முந்திரி பழம் ரத்தத்தில் இருக்கும் மாசுகளை நீக்கி ரத்தத்தை சுத்தப்படுத்தும் ஆற்றல் உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்