முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிரியர்களுக்கு மிரட்டல்: முலாயமுக்கு நோட்டீஸ்

சனிக்கிழமை, 19 ஏப்ரல் 2014      அரசியல்
Image Unavailable

 

புது டெல்லி, ஏப்.20 - உத்தரப்பிரதேச மாநிலம் அரசுப் பள்ளிகளில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், சமாஜ்வாதி கட்சிக்கு வாக்களிக்காவிட்டால், அவர்கள் பணி நிரந்தரம் ரத்து செய்யப்படும் என்று மிரட்டியதாக எழுந்த புகாரை அடுத்து அக்கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவுக்கு காரண விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்தப் புகாருக்கு அடிப்படை ஆதாரம் இருப்பதால், இன்று மாலைக்குல் உரிய விளக்கம் அளிக்காவிட்டால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் புலநதசஹரில் கடந்த 3-ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் பேசிய முலாயம் சிங் யாதவ், ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்திருப்பது சமாஜ்வாதி அரசுதான். ஆகையால் மக்களவைத் தேர்தலில் எங்கல் கட்சிக்கு வாக்களிக்காவிட்டால் பணி நிரந்தரம் ரத்து செய்யப்படும் என்று பேசியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் முலாயம் சிங்குக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீஸில் மத்தியிலோ மாநிலத்திலோ பதவியில் இருக்கும் கட்சியினர், தேர்தலில் தங்கள் ஆதையத்துக்காக பதவி அதிகாரத்தை பயன்படுத்துவதை தேர்தல் நடத்தை விதியை மீறிய செயலாகும் என்று சுட்டிக்காட்டியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்