முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விவசாயிகளின் உரிமையை நிலைநாட்டிய முதல்வர்

வியாழக்கிழமை, 21 ஆகஸ்ட் 2014      தமிழகம்
Image Unavailable

 

மதுரை, ஆக. 22 - அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா தனது 13 ஆண்டுகால ஆட்சியில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். மக்கள் தலைவராக இருக்கும் ஒருவர் தன் மக்களை பற்றி சிந்திக்கக்கூடாது. நாட்டு மக்களைப்பற்றிதான் அவர்கள் சிந்திக்க வேண்டும். தலைவர்களுக்கு வாரிசுகள் இருக்கக்கூடாது என்று ஒரு கிரேக்க பேரறிஞர் கூறியிருக்கிறார். அப்போதுதான் அவர்களால் மக்கள் தொண்டை செவ்வனே செய்ய முடியும். அந்த அடிப்படையில் தமிழக மக்களுக்கு தன்னையே அர்ப்பணம் செய்தவர் முன்னாள் முதல்வர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவரது வழியில் தற்போது தமிழ்நாட்டை ஆட்சி செய்து வரும் முதல்வர் ஜெயலலிதா, மக்களால் நான், மக்களுக்காக நான் என்ற கொள்கையை பின்பற்றி திறம்பட ஆட்சி செய்து வருகிறார். மக்களுக்கு என்ன செய்யலாம் என்பது பற்றி நாள்தோறும் அவர் சிந்தித்து வருகிறார். அந்த சிந்தனையில் உருவான திட்டங்கள் பலப்பல.

தொட்டில் குழந்தை திட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையம், திருக்கோயில் அன்னதான திட்டம், மழை நீர் சேகரிப்பு திட்டம் என்று மக்களுக்காக பல திட்டங்களை கொண்டுவந்த முதல்வர் வாயில்லா ஜீவன்களையும் மறக்கவில்லை. அந்த அடிப்படையில் அவர் கொண்டுவந்த ஒப்பற்ற திட்டம்தான் யானைகள் நலவாழ்வுத்திட்டம். இப்படி முந்தைய ஆட்சியில் பல புரட்சி திட்டங்களை கொண்டுவந்த முதல்வர் ஜெயலலிதா, இப்போதைய ஆட்சியில் மேலும் பல திட்டங்களை அமுல்படுத்தியுள்ளார். அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா உப்பு, அம்மா மருந்தகம், அம்மா திறன் வேலை வாய்ப்பு திட்டம். இப்படி அவரின் திட்டங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். விவசாயிகள் நலனில் பெரும் அக்கறை கொண்டவர் முதல்வர் ஜெயலலிதா. காவிரி பிரச்சினையில் சட்டப்போராட்டம் நடத்தி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பை கெஜட்டில் வெளியிடச்செய்த பெருமை முதல்வரையே சேரும். இது அவரது 30 ஆண்டுகால அரசியல் வாழ்வுக்கு கிடைத்த மகத்தான வெற்றி என்று அவரே கூறியிருக்கிறார். அடுத்து அவருக்கு கிடைத்த மகத்தான வெற்றி முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தியது.

கேரளாவின் கொட்டத்தை ஒடுக்கும் வகையில் சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து அதிலும் மகத்தான வெற்றி பெற்றார் முதல்வர் ஜெயலலிதா.

இந்த வழக்கில் கேரள மாநில அரசை கண்டித்த சுப்ரீம்கோர்ட்டு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த மீண்டும் அனுமதி அளித்தது. அதன்படி சமீபத்தில் அணையின் நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில் ஷட்டர்கள் இறக்கப்பட்டுள்ளன. இப்படி காவிரி பிரச்சினயாக இருந்தாலும் சரி, முல்லைப்பெரியாறு பிரச்சினையாக இருந்தாலும் சரி. விவசாயிகளுக்காக போராடி அதில் மகத்தான வெற்றி கண்டு விவசாயிகளின் உரிமையை நிலைநாட்டிவிட்டார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. இன்னும் ஒரு விஷயத்தில்தான் அவருக்கு வெற்றிக்கனி கிடைக்க வேண்டும். அதுதான் கச்சத்தீவு பிரச்சினையாகும். கச்சத்தீவையும் முதல்வர் மீட்டுவிட்டால் அவரது புகழை எந்த தீய சக்தியாலும் அசைக்க முடியாது என்பதுதான் மறுக்க முடியாத உண்மையாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்