முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டீசல் விலை நிர்ணய அதிகாரத்தை கைவிட அரசுக்கு வேண்டுகோள்

திங்கட்கிழமை, 15 செப்டம்பர் 2014      இந்தியா
Image Unavailable

 

மும்பை. செப்.16 - டீசல் விலை நிர்ணய அதிகாரத்தை எண்ணெய் நிறுவனங்களின் வசமே ஒப்படைக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பேசிய அவர்: "சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வெகுவாக சரிந்துள்ளது. இத்தருணம், டீசல் விலை நிர்ணய அதிகாரத்தை அரசு எண்ணெய் நிறுவனங்களின் வசமே ஒப்படைக்க சரியானது. பெட்ரோல் விலையை தற்போது எண்ணெய் நிறுவனங்களே முடிவு செய்து கொள்வதுபோல், டீசல் விலையையும் எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்ய அரசு அனுமதிக்க வேண்டும்" என கூறியுள்ளார்.

பிரதம மந்திரியின் ஜன் தன் திட்டம் சிறப்பானது என ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.ஜன் தன் திட்டம் சிறப்பானது, அதன் நோக்கம் திட்டத்தில் பயனாளிகளை சேர்ப்பதில் அவசரம் காட்டுவதாக இருக்கக் கூடாது. மாறாக அனைவரும் பலன் பெறும் வகையில் அமைய வேண்டும் என ராஜன் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்