முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மலை மலைமீது மகாதீபம் தரிசிக்க இன்றே கடைசி ஆருத்ரா தரிசன நாளில் தீப மை விநியோகம்

புதன்கிழமை, 21 டிசம்பர் 2016      திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவில் தீபவிழாவில் 2668 அடி உயரமுள்ள மலை உச்சி மீது ஏற்றப்பட்ட மகாதீப தரிசனம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து தீப மை பிரசாதம் வருகிற ஜனவரி 11ந் தேதி ஆருத்ரா தரிசன நாளில் பக்தர்களுக்கு வழங்கப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாதம் 10நாட்கள் நடக்கும் பிரம்மோற்சவமான கார்த்திகை தீபவிழா மிகவும் முக்கியமானது. விழாவின் 10ம் நாள் காலையில் கோவிலில் பரணி தீபமும் மாலையில் கோவிலின் பின்புறமுள்ள 2668 அடி உயரமுள்ள மலை உச்சியில் பெரிய கொப்பரையில் மகாதீபம் ஏற்றப்படும். மகாதீபம் ஏற்ற 1000 மீட்டர் காடா துணி, 3500 கிலோ நெய் பயன்படுத்தப்படும். இந்த நெய் காணிக்கை செலுத்தும் பக்தர்களுக்கு கோவிலில் ரசீது வழங்கப்படுகறது. மலை மீது ஏற்றப்படும் தீபம் தொடர்ந்து 11 நாட்கள் எரியும். இதன்படி இன்று (வியாழக்கிழமை) வரை தீபத்தை தரிசனம் செய்ய முடியும். நாளை மறுநாள் அதிகாலை தீபக்கொப்பரை மலையிலிருந்து இறக்கிவரப்பட்டு கோவிலில் பாதுகாப்பாக வைக்கப்படும். இதில் சேகரிக்கப்படும் தீப மை கிருஷ்ணகாந்த மை என்று அழைக்கப்படுகிறது. மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் நடக்கும் ஆருத்ரா தரிசன நாளில் சிவகாமி சமேத நடராஜருக்கு அஞ்சன மையாக அணிவிக்கப்பட்டு பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இந்த ஆண்டு மார்கழி திருவாதிரை நட்சத்திரம் 2017ந் தேதி ஜனவரி 11ந் தேதி வருகிறது. அதனைத் தொடர்ந்து நெய் தீப காணிக்கை செலுத்தியவர்கள் ரசீது கோவில் அலுவலகத்தில் கொடுத்து மை பிரசாதம் பெற்றுக் கொள்ளலாம். மேலும் தபால் மூலமாகவும் அனுப்பப்படும் என கோவில் இணை ஆணையர் சி.ஹரிபிரியா தெரிவித்துள்ளார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்