முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோடியக்கரை மற்றும் ஆறுகாட்டுத்துறையில் அபூர்வ ஆலிவ்ரெட்லி ஆமை முட்டைகள் சேகரிக்கும் பணி வனத்துறையினர் தீவிரம்

சனிக்கிழமை, 31 டிசம்பர் 2016      நாகப்பட்டினம்
Image Unavailable

வேதாரண்யம் அருகே கோடியக்கரை மற்றும் ஆறுகாட்டுத்துறையில் அபூர்வ ஆலிவ்ரெட்ல ஆமை முட்டைகள் சேகரிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்

உலகில் அழிந்து வரும் அபூர்வ ஆமையினத்தை சேர்ந்த ஆலிவ் ரெட்லி ஆமைகளை விருத்தி செய்து பாதுகாக்க தமிழகஅரசு கடந்த 1983-ம் ஆண்டில் வேதாரண்யம் அருகே கோடியக்கரை மற்றும் ஆறுகாட்டுத்துறையில் அமைக்குஞ்சு பொறிப்பகத்தை ஏற்படுத்தியது அபூர்வ இனத்தைச் சேர்ந்த ஆலிவ்ரெட்லி ஆமை முட்டைகள் சேகர்pத்து குஞ்சு பொறித்த உடன் அவற்றை வனத்துறையினர் கடலில் விட்டு வருகின்றனர்

ஆண்டு தோறும் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் வேதாரண்யம் கடற்கரை பகுதிக்கு வரும்; இந்த அபூர்வ ஆமைகள் இரவு நேரத்தில் கடற்கரையோரம் குழிபறித்து முட்டைகளை இடுகின்றன. பின்னர் தனது கால்களால் முட்டைகளை மூடி விட்டு சென்று விடுகின்றன. இந்த முட்டைகள் வனத்துறையினரால் சேகரிக்கப்பட்டு செயற்கை ஆமைக்குஞ்சு பொறிப்பகங்கள் மூலம் பொறிக்க வைக்கப்படுகிறது

ஆறுகாட்டுத்துறையில் 105 ஆமை முட்டைகளும் கோடியக்கரையில் 203 ஆமை முட்டைகளும் சேகரிக்கப்பட்டு குஞ்சு பொறிப்பதற்காக ஆமைக்குஞ்சு பொறிப்பகத்தில் குழி தோண்;;டி மண்ணில் புதைத்து வைக்கும் பணியில் வனத்துறையை சேர்ந்த ஆமை முட்டை சேகரிப்பாளர்கள் ஈடுப்பட்டனர் இது வரையில் மூன்று கட்டங்களாக 308 ஆலிவ்ரெட்டி ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டுள்ளன

இது குறித்து கோடியக்கரை வனச்சரகர் அயூப்கான் கூறுகையில் உலகில் அழிந்து வரும் ஆமையினமாக ஆலிவ்ரெட்லி ஆமைகள் உள்ளன. மீன்;கள் அதிகமாக உற்பத்தியாகும் பவளப்பாறை பகுதியில் மீன்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ள இந்த கடல் ஆமைகள் உள்ளது என்றும் இத்தகைய கடல் ஆமைகளை விற்பனை செய்வது குற்றமாகும், அப்படி யாரும் ஆமை முட்டைகளை விற்பனை செய்தலோ அல்லது இந்த அபூர்வ ஆமைகள் கடற்கரையில் இறந்து கிடந்தலோ தகவல் தெரிவிக்குமாறு தெரிவித்துள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்