திருமங்கலம் தொகுதியில் தமிழக அரசின் விலையில்லா பொங்கல் பரிசுப்பொருட்கள்:

செவ்வாய்க்கிழமை, 10 ஜனவரி 2017      மதுரை
tmm

 திருமங்கலம்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட திருமங்கலம் தாலுகாவைச் சேர்ந்த பயனாளிகள் 62ஆயிரம் பேருக்கு தமிழக அரசின் சார்பில் விலையில்லா பொங்கல் பரிசுப்பொருட்கள் வழங்கிடும் திட்டத்தை தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ,வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

பொங்கல் பரிசுப் பொருட்கள்:

பொங்கல் பண்டிகை வருவதை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் தமிழகத்திலுள்ள பயனாளிகள் அனைவருக்கும் தமிழக அரசின் சார்பில் விலையில்லா பொங்கல் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.இந்த விலையில்லா பொங்கல் பரிசுத் தொகுப்பில் ஒருகிலோ பச்சரிசி,ஒருகிலோ சர்க்கரை,முந்திரி,திராட்சை,ஏலக்காய் மற்றும் இரண்டு அடி நீளக் கரும்புத்துண்டு ஆகியவை குடும்பஅட்டை தாரர்களுக்கு வழங்கப்படுகிறது.இதற்காக தமிழக அரசு 200கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.இதன் ஒருபகுதியாக மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட திருமங்கலம் தாலுகாவைச் சேர்ந்த பயனாளிகள் 62ஆயிரம் பேருக்கு விலையில்லா வேஷ்டி,சேலைகள் வழங்கிடும் திட்டத்தின் துவக்கவிழா திருமங்கலம் நகர் விமான நிலையச்சாலையில் உள்ள எ.1462.திருமங்கலம் வேளாண்மை விளைபொருள் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் வெகுசிறப்பாக நடைபெற்றது.

அமைச்சர்கள் வழங்கினார்கள்:

இந்நிகழச்சிக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் தலைமையேற்று மதுரை மாவட்டத்தில் தமிழக அரசின் சார்பில் நடைபெற்று வரும் மக்கள் நலத்திட்டங்கள் குறித்து உரையாற்றினார்.ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்ட இந்த விழாவில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ,தமிழக வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்டு திருமங்கலம் தாலுகாவிலுள்ள பயனாளிகள் 62ஆயிரம் பேருக்கு தமிழக அரசின் சார்பில் விலையில்லா பொங்கல் பரிசுப் பொருட்கள் வழங்கிடும் திட்டத்தினை தொடங்கி வைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா பொங்கல் பரிசுப்பொருட்களை வழங்கி சிறப்புரையாற்றினார்கள்.இதையடுத்து திருமங்கலம் தொகுதியின் அனைத்து பகுதிகளிலும் உள்ள நியாய விலைக்கடைகள் மூலமாக பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக விலையில்லா பொங்கல் பரிசு பொருட்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுவிடும் என கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கலந்துகொண்டவர்கள்:

இந்தவிழாவில் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ்,மாவட்ட வருவாய் அலுவலர் வேலுச்சாமி,மதுரை மாவட்ட துணை ஆட்சியர் ரா.ஜீவா,திருமங்கலம் வட்டாட்சியர் மலர்விழி,முன்னாள் எம்.எல்.ஏ.,கே.தமிழரசன்,முன்னாள் மாவட்ட செயலாளர் எம்.ஜெயராமன்,மாவட்ட துணை செயலாளர் அய்யப்பன்,எம்.ஜி.ஆர் மன்ற துணை தலைவர் எம்.எஸ்.பாண்டியன்,மாநகர் அவைதலைவர் துரைப்பாண்டி,கழக சிறுபான்மை பொருளாளர் ஜான்மகேந்திரன்,வழக்கறிஞர் பிரிவு செயலாளர் தமிழ்ச்செல்வம்,இலக்கியஅணி செயலாளர் திருப்பதி,திருமங்கலம் வேளாண் விளைபொருள் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைவர் ஆண்டிச்சாமி,திருமங்கலம் ஒன்றிய கழக செயலாளர் வக்கீல் அன்பழகன், முன்னாள் திருமங்கலம் யூனியன் சேர்மன் தமிழழகன்,முன்னாள் கள்ளிக்குடி யூனியன் சேர்மன் மகாலிங்கம்,டி.கல்லுப்பட்டி ஒன்றிய செயலாளர் ராமசாமி,திருமங்கலம் நகர செயலாளர் ஜே.டி.விஜயன்,பேரூர் செயலாளர்கள் பாலசுப்பிரமணி,நெடுமாறன், விற்பனை சங்க துணை தலைவர் சௌடார்பட்டிபாண்டியன், மற்றும் நிர்வாகஸ்தர்கள் கட்சி நிர்வாகிகள் சதீஸ்சண்முகம்;,வேப்பங்குளம் கண்ணன்,அழகர்,பாவடியான்,மாணிக்கம்,சுமதிசாமிநாதன்,சுகுமார்,சிவன்காளை,கலைச்செல்வன்,செல்வம்,சிவகுமார்,ராஜா,கூட்டுறவு சங்க செயலாளர் பன்னீர்செல்வம், விற்பனையாளர்கள் சங்க மாநில தலைவர் செல்லத்துரை,துணை தலைவர்மலைச்சாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: