முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொழிலாளர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு திட்டங்களை

செவ்வாய்க்கிழமை, 17 ஜனவரி 2017      விருதுநகர்
Image Unavailable

ராஜபாளையம்,  - ராஜபாளையம் ராம்கோ குரூப் பஞ்சாலை 6நிறுவனங்களில் பொங்கல் விளையாட்டு விழா ராஜபாளையம் மில்ஸ் ஊழியர்கள் மனமகிழ் மன்றத்தின் விளையாட்டு மைதானத்தில் ராம்கோ குரூப் சேர்மன் ராமசுப்பிரமணியராஜா மற்றும் வைஸ் சேர்மன் வெங்கட்ராமராஜா தலைமையில் நடைபெற்றது.  அபினவ் கலந்து கொண்டு சிறப்பித்தார்.  விழாவில் 2016வது வருடம் முழுவதும் 6 நிறுவனங்களிலும் ஊதிய இழப்பின்றி பணியாற்றிய 1120 தொழிலாளர்களுக்கும், 295 நாட்களுக்கும் மேலாக ஊதியம் ஈட்டிய 1050 தொழிலாளர்களுக்கும், ஆலையின் அனைத்துப் பிரிவுகளிலும் சிறப்பாகப் பணியாற்றிய 163 தொழிலாளர்களுக்கும், 35 வருடம், 25 வருடம், 20 வருடம் மற்றும் 15 வருடம் சர்வீஸ் பூர்த்தி செய்த 196 தொழிலாளர்கள் மற்றும் 561 தொழிலாளர்களுக்கு ஊதிய இழப்பு இல்லாமல்  அதிக வருடங்கள் பணிபுரிந்ததற்காகவும், குழு விளையாட்டு மற்றும் தடகளப் போட்டிகளில் வெற்றி பெற்ற தொழிலாளர்களுக்கும பரிசுகள் வழங்கப்பட்டன. 

ராம்கோ குரூப் நூற்பாலைகளின் முதுநிலை பொது மேளாலர் நாகராஜன் வரவேற்றுப் பேசினார்.  தொழிற்சங்கத் தலைவர்கள் வாழ்த்தி பேசினர். விழாவில் ராம்கோ சேர்மன் ராமசுப்பிரமணியராஜா பேசியதாவது,

உற்பத்திறனும், தரமும் உயர்ந்து உலக அளவில் ராம்கோ நிறுவனங்களின் வாடிக்கையளர்களும் மிகுந்த திருப்தி அடைந்துள்ளனர், ஆலையில் முக்கிய செயல்பாடுகள் குறித்து, முதலில் தொழிலாளர்களிடம் கலந்து ஆலோசித்து பின்னரே முடிவெடுக்கும் முறiயிலும், தொழிலாளர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு திட்டங்களை செயல் படுத்துவதன் மூலமாகவும், ஆலையின் வெற்றிக்கு அஸ்திவாரம் என்றும் இந்தியாவில் பஞ்சாலை தொழிலில் கடந்த ஆண்டிற்கு முந்தைய ஆண்டு தொழிலாளர் ஒத்துழைப்பால் அவற்றையெல்லாம் சமாளிக்க முடிந்தது அதே போல் இப்பொழுதுள்ள நெருக்கடியான நிலைகளை சமாளிக்க தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களும் தொடர்ந்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்; என கூறினார்.

மேலும் ராம்கோ குரூப் பஞ்சாலைகளுக்கு இடையேயான உற்பத்தித் திறன் அதிகரிப்பு, சுற்றுப்புறத் தூய்மை, செலவினங்களை கட்டுப்படுத்துதல் ஆகியவற்றின் அடிப்படையில் எக்ஸெல் அவார்டு வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதில் முதல் பரிசு ராஜபாளையம் டெக்ஸ்;டைல்ஸ்க்கும், இராண்டாவது பரிசு ராஜபாளையம் டெக்ஸ்டைல் லிமிடெட் சுப்பிரமணியத்திற்கும், மூன்றாவது பரிசு ராஜபாளையம் டெக்ஸ்டைல்ஸிற்க்கும் வழங்கப்பட்டன.  செண்பககுமரன் நன்றி கூறினார்.  விழாவுக்கான ஏற்பாடுகளை ராஜபாளையம் மில்லின் வைஸ் பிரஸிடெண்ட் ராஜு மற்றும் மனிதவளத்துறை அலுவர்களும் செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்