முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜனாதிபதியிடம் சான்றிதழ் பெற்ற பட்டிவீரன்பட்டி மாணவிக்கு பள்ளி நிர்வாகிகள் பாராட்டு

திங்கட்கிழமை, 30 ஜனவரி 2017      திண்டுக்கல்
Image Unavailable

  வத்தலக்குண்டு - தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் நடத்திய வாக்காளர் தின ஓவியப் போட்டியில் மாநில அளவில் தேர்வாகி டில்லியில் நடைபெற்ற இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் நடைபெற்ற விழாவில் சான்றிதழ் பெற்ற பட்டிவீரன்பட்டி மாணவிக்கு பள்ளி நிர்வாகிகள் பாரட்டு தெரிவித்தனர்

திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி என்-.எஸ்.வி.வி மெட்ரிக்மேல் நிலைப்பள்ளி மாணவி ஆஷிபாபானு இம்மாணவி இப்பள்ளியில் 10&ஆம் வகுப்பு படித்து வருகிறார். தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு வாக்கும் முக்கியமே- என்ற தலைப்பின் கீழ் 15 வயது முதல் 17 வயது வரை உள்ள மாணவ,மாணவிகளுக்கு ஓவியப் போட்டி நடத்தப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் உள்ள சட்டமன்ற தொகுதி வாரியாக நடைபெற்ற இப்போட்டியில் ஆயிரக்கணக்கான மாணவ,மாணவிகள் பங்கேற்றனர். இதில் சிறந்த விழிப்புணர்வு ஓவியமாக பட்டிவீரன்பட்டி என்-.எஸ்.வி.வி மெட்ரிக்மேல் நிலைப்பள்ளி மாணவி ஆஷிபாபானு வரைந்த ஓவியமும், நெல்லையைச் சேர்ந்த கிருத்திகா ஆகிய இருவரின் ஓவியமும் மாநில அளவில் தேர்வானது. இம்மாணவியை டில்லியில் நடைபெற்ற டில்லியில் நடைபெற்ற தேர்தல் ஆணையம் சார்பில் நடைபெற்ற விழாவில் சான்றிதழை ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி இம்மாணவிக்கு வழங்கினார். இந்திய தலைமை தேர்தல் ஆணையாளர் நசீம்ஜைதி,உதவி தேர்தல் ஆணையாளர் உமேஷ்சின்கா உட்பட பலர் இவ்விழாவில் கலந்து கொண்டுள்னர். இவ்விழாவில் பங்கேற்ற குடியரசு தலைவர் பிரணாப்முகர்ஜி இம்மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்து விழாவில் பேசியுள்ளார். தேசிய அளவில் சான்றிதழ் பெற்ற ஆஷிபாபானுவை பள்ளிகளின் மேலாண்மை குழுத்தலைவரும், இந்துநாடார்கள் உறவின்முறை சங்க தலைவருமான அசோக்பாபு, செயலாளர் தீனதயாளமூர்த்தி, பள்ளி தலைவர் கோபிநாத், பள்ளி செயலர் நிர்மல் மற்றும் பள்ளி முதல்வர் ஆத்தியப்பன் ஆகியோர் பள்ளி சார்பில் பரிசினை வழங்கி பாராட்டினார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்