முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செல்லாத பழைய ரூ.500, ரூ.1000 வைத்திருந்தால் ரூ. 10000 அபராதம் :லோக்சபாவில் மசோதா தாக்கல்

சனிக்கிழமை, 4 பெப்ரவரி 2017      வர்த்தகம்
Image Unavailable

புதுடெல்லி  - செல்லாத பழைய ரூ.500, ரூ.1000 வைத்திருந்தால்  ரூ. 10000 அபராதம் விதிக்கப்படும் மசோதா  லோக்சபாவில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி  தாக்கல் செய்தார். கள்ள நோட்டு, கறுப்பு பணத்தை ஒழிக்கும் நோக்குடன் உயர் மதிப்புடைய 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறுவதாக கடந்த நவம்பர் 8ஆம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார்.இதனையடுத்து சில்லறை நோட்டுக்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. வங்கியில் இருந்து பணம் எடுக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. புதிய 2000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன. டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கருப்பு பணம் ஒழிப்பு நடவடிக்கை :
செல்லாத ரூபாய் நோட்டுகளை 10க்கு மேல் வைத்திருப்போருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கும் வகையில் மத்திய அரசு கடந்த டிசம்பர் மாதம் 30ஆம் தேதி அவசரச் சட்டம் பிறப்பித்தது. இந்த அவசரச் சட்டத்தை நிரந்தர சட்டமாக மாற்றும் வகையில், லோக்சபாவில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி மசோதா ஒன்றை  தாக்கல் செய்தார்.லோக்சபாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மசோதாவில், நிதி கட்டமைப்பில் புழக்கத்தில் இருந்த கள்ள ரூபாய் நோட்டுகள், கருப்பு பணம் ஆகியவற்றை ஒழிப்பதற்கு ரிசர்வ் வங்கியின் பரிந்துரையை ஏற்று, உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெறுவது என்ற முடிவை மத்திய அரசு எடுத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதிக்குப் பிறகு, செல்லாத ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை கையிருப்பில் வைத்திருத்தல், புழக்கத்தில் விடுதல், வாங்குதலுக்கு தடை விதிக்கப்படுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.ஆராய்ச்சி, படிப்பு போன்றவற்றுக்காக பழைய நோட்டுகளை வைத்திருக்க விரும்புவோர் மட்டும் 25 எண்ணிக்கையில் அத்தகைய நோட்டுகளை வைத்திருக்க அனுமதிக்கப்படுகிறது என்றும் மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த மசோதா, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதும், செல்லாத ரூ.500, ரூ.1,000 ஆகிய ரூபாய் நோட்டுகளை பத்துக்கும் அதிகமான எண்ணிக்கையில் வைத்திருப்போருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் அல்லது அவர்களிடம் இருக்கும் நோட்டுகளின் எண்ணிக்கையைக் காட்டிலும் 5 மடங்கு அதிகம், இந்த 2 தொகைகளில் எது அதிகமாக உள்ளதோ, அது அபராதமாக விதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்