முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் பன்னீர்செல்வமே கட்சியின் செயலாளராகவும் முதல்வராகவும் வேண்டும் பெரியகுளம் நகர் அதிமுக கூட்டத்தில் சிறப்பு தீர்மானம்

புதன்கிழமை, 8 பெப்ரவரி 2017      தேனி
Image Unavailable

தேனி - கடந்த 7ம் தேதி மறைந்த முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நினைவிடத்தில் சுமார் 40 நிமிடம் தியானம் மேற்கொண்ட தமிழக முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் அவர்கள் தன்னை கட்டாயப்படுத்தி முதல்வர் பதிவியிலிருந்து ராஜினாமா செய்ய வைத்தனர் என்றார். அதனை தொடர்ந்து பெரியகுளத்தில் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த நகர அதிமுகவினர் பேனர்களில் இருந்த சசிகலாவின் உருவத்தை கிழித்து எரிந்தனர். மேலும் ஒ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பட்டாசு வெடித்து கொண்டாடினர். பின்னர் ஓம்சிவம் திருமண மஹாலில் நகர அதிமுக செயலாளர் என்.வி.ராதா தலைமையில் மாவட்ட பிரதிநிதி என்.ராஜாங்கம், துணை செயலாளர் அப்துல்சமது,  மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் முருகானந்தம், பாலு, மஞ்சுளாமுருகன், கண்ணன்  ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் மறைந்த புரட்சித்தலைவி அம்மா அவர்கள் சுட்டிக்காட்டிய தற்போதைய முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் அவர்களே கழகத்தின் பொதுசெயலாளராகவும், முதல்வராகவும் தொடர்ந்து பணியாற்றிட வேண்டும் என்று  சிறப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் நகர கூட்டுறவு பண்டகசாலை துணைத்தலைவர் நாராயணன், தாமரைக்குளம் பேரூராட்சி துணைத்தலைவர் சந்தோசம், கூட்டுறவு சங்க இயக்குநர்கள் அன்பு, சிவபாலு, வார்டு செயலாளர்கள் ஏர்செல் ரபீக்அகமது, காஜாமுயுனுதீன், வழக்கறிஞர் தவமணி, தாமரைக்குளம் பாட்சா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்