முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தனிநபர் வருமானம் அதிகரிப்பு

புதன்கிழமை, 1 மார்ச் 2017      வர்த்தகம்
Image Unavailable

புதுடெல்லி, இந்தியாவில் தனிநபர் நிகர வருமானம் நடப்பாண்டில்  10.2 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதாவது ஆண்டு வருமானம் ரூ. 1 லட்சத்து 818 ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய புள்ளியல் மற்றும் திட்டம் செயல்படுத்துதல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த 2015-16-ம் ஆண்டில் இந்தியாவில் தனிநபர் நிகர வருமானம் 8.9 சதவீதமாக இருந்தது. ஆதாவது ஆண்டு வருமானம் 94 ஆயிரத்து 178 ஆக இருந்தது. வளர்ச்சி விகிதம் 2016-2017-ம் ஆண்டில் 5.9 சதவீதமாக இருக்கும். இது 6.6 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. நாட்டின் ஒட்டுமொத்த வருமானம் 2011-12-ம் ஆண்டின் விலைகளின் அடிப்படையில் 2016-2017-ம் ஆண்டில் 120.28 டிரிலியனாக இருக்கும். 7.2 சதவீதம் அதிகரித்துள்ளது.  கடந்த 2015-16-ம் ஆண்டில் 112.22 திரிலியனாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஒரு பில்லியன் ரூபாய் என்பது இந்திய மதிப்பில் 100 கோடியாகும். 100 பில்லியன் ஒரு டிரிலியனாகும். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்