முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மணிப்பூரில் ஐரோம் ஷர்மிளா வெறும் 90 வாக்குகள் பெற்று தோல்வி!

சனிக்கிழமை, 11 மார்ச் 2017      அரசியல்
Image Unavailable

இம்பால்  - மணிப்பூரில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்ற முழக்கத்துடன் அரசியல் கட்சி தொடங்கி முதல்வரை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்ட ஐரோம் ஷர்மிளா வெறும் 90 வாக்குகளே பெற்று படுதோல்வி அடைந்தார்.

16 ஆண்டுகள் போராட்டம்
மணிப்பூரில் பாதுகாப்பு படையினருக்கு வழங்கப்பட்டு உள்ள சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய்யக்கோரி, சமூக ஆர்வலர் ஐரோம் ஷர்மிளா கடந்த 16 ஆண்டுகளாக உண்ணாவிரத போராட்டம் நடத்தி வந்தார். கடந்த 2000-ம் ஆண்டு உண்ணாவிரதத்தை தொடங்கியது முதல் பல்வேறு முறை தற்கொலைக்கு முயற்சித்ததாக கைது செய்யப்படுவதும் பின்னர் விடுதலை ஆவதுமாக இருந்தார்.

அரசியலில் ...
இந்நிலையில், உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக்கொள்வதாக ஐரோம் ஷர்மிளா கடந்த ஆகஸ்ட் மாதம் தெரிவித்தார். பின்னர் அவருக்கு இம்பால் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஜாமீனில் விடுதலையான ஐரோம் ஷர்மிளா, அரசியலில் இணைந்து மணிப்பூர் முதல்வராக விரும்புவதாகவும், அதன்பிறகு ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய்வதாகவும் தெரிவித்தார்.

புதிய கட்சி தொடக்கம்
இந்நிலையில், தற்கொலை முயற்சி வழக்கில் இருந்து அவரை முற்றிலுமாக விடுவித்து இம்பால் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இனி ஐரோம் ஷர்மிளா சுதந்திரமாக செயல்படலாம் என்று நீதிமன்றம் கூறியது. இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஐரோம் ஷர்மிளா, புதிய அரசியல் கட்சியை தொடங்க உள்ளதாகவும், தனது  என்றும் கூறினார்.

முதல்வரை எதிர்த்து...
அதன்படி, மக்கள் எழுச்சி நீதி கூட்டணி என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கினார் ஐரோம் ஷர்மிளா. கட்சி ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய்வதற்கு தனது கட்சி தீவிரமாக போராடும் என அறிவித்ததுடன் மணிப்பூர் சட்டசபை தேர்தலில் தவ்பால் தொகுதியில் முதல்வரை ஒக்ரம் ஐபோபி சிங்கை எதிர்த்து போட்டியிட்டார்.

படுதோல்வி
தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், தவ்பால் தொகுதியில் முதல்வர் ஒக்ரம் இபோபி சிங் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளரை விட 8 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் கூடுதலாக வாங்கி வெற்றி பெற்றுள்ளார். இந்த தேர்தலில் வெற்றி பெறாமல் போனாலும் இரண்டாம் இடத்தையாவது பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஐரோம் ஷர்மிளா, வெறும் 90 வாக்குகளை மட்டுமே பெற்று, டெபாசிட் பறிபோகும் அளவுக்கு படுதோல்வி அடைந்துள்ளார்.

மீண்டும் நிரூபணம்
தேர்தல் முடிவுகள் வெளியாகிவரும் நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஐரோம் ஷர்மிளா, பண பலமும் அதிகார பலமும் தன்னை வீழ்த்தி விட்டதாக குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் அரசியல் களத்தில் சமூகப் போராளிகளும், பண பலம் இல்லாதவர்களும் தாக்குப் பிடிக்க முடியாது என்பது தற்போது மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்