முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜனாதிபதி தேர்தலில் காந்தி பேரனை நிறுத்த எதிர்க்கட்சிகள் திட்டம் : பாரதீய ஜனதாவுக்கு எதிராக அதிரடி வியூகம்

சனிக்கிழமை, 6 மே 2017      அரசியல்
Image Unavailable

புதுடெல்லி  - ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில், மகாத்மா காந்தியின் பேரன் கோபால கிருஷ்ண காந்தியை பொது வேட்பாளராக நிறுத்த ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.  ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதம் நிறைவடைகிறது. எனவே, புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெறவுள்ளது. மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி, புதிய ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்யவும், தேர்தல் வியூகம் அமைக்கவும் நடபுதுடெல்லி, மே 07 -
ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக மகாத்மா காந்தி பேரன் கோபால கிருஷ்ண காந்தியை நிறுத்த ஆலோசனை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜூலையில் முடிகிறது
தற்போது ஜனாதிபதியாக இருக்கும் பிரணாப் முகர்ஜி முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போது 2012-ம் ஆண்டு அந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது பதவி காலம் வருகிற ஜூலை மாதத்துடன் முடிவடைகிறது. இதையொட்டி புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான பணியை தேர்தல் ஆணையம் தொடங்கி விட்டது.

பாபர் மசூதி வழக்கு
மத்தியில் ஆளும் பா.ஜனதா கட்சி சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுகிறார். பா.ஜனதா மூத்த தலைவர் எல்.கே.அத்வானி அக்கட்சியின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்று கூறப்பட்டது. ஆனால் அவர் மீதான பாபர் மசூதி இடிப்பு வழக்கில் மீண்டும் விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதனால் அத்வானி நிறுத்தப்படுவது கேள்விக்குறியாகி விட்டது. இதே போல் மற்றொரு மூத்த தலைவரான முரளி மனோகர் ஜோஷி மீதும் பாபர் மசூதி இடிப்பு வழக்கு இருப்பதால் அவரும் போட்டியில் இல்லை.
இதனால் வேட்பாளராக யாரை நிறுத்தலாம் என்று பா.ஜனதா மேலிடம் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது.

பா.ஜ.க.வுக்கு பலம்
பாராளுமன்றத்தில் பா.ஜனதாவுக்கு பெரும்பான்மை எம்.பி.க்கள் பலம் இருக்கிறது. மேலும் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றியதுடன் எம்.எல்.ஏ.க்கள் பலமும் அதிகரித்துள்ளது. இது தவிர பா.ஜனதாவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சி எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆதரவும் உள்ளது. இதனால் பா.ஜனதா சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளருக்கு ஆதரவு அதிகரித்துள்ளது.

பொது வேட்பாளர்
இதற்கிடையே ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்த ஆலோசனை நடந்து வருகிறது. இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி நாடு முழுவதும் எதிர்க்கட்சி தலைவர்களை அழைத்துப் பேசி ஆலோசனை நடத்தி வருகிறார். சில நாட்களுக்கு முன் பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ்குமார் டெல்லி சென்று காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை சந்தித்து ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனை
அதன் பிறகு ராஷ்டீரிய ஜனதா தளம் தலைவர் லல்லு பிரசாத் யாதவுடன் சோனியாகாந்தி டெலிபோனில் பேசி ஆலோசனை நடத்தினார். இதே போல் முலாயம்சிங் யாதவுடனும் பேச்சு நடத்தப்பட்டது. மேலும் இடது சாரி கட்சிகள், திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க. ஆகிய கட்சிகளுடன் பேச்சு நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

காந்தி பேரன்
இதற்கிடையே ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக கோபால கிருஷ்ணகாந்தியை நிறுத்த ஆலோசனை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் மகாத்மா காந்தியின் பேரன் ஆவார். மூதறிஞர் ராஜாஜிக்கும் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது. ஐ.ஏ.எஸ். படித்து 1968-ம் ஆண்டு முதல் 1985-ம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் பணிபுரிந்துள்ளார். அதன் பிறகு துணை ஜனாதிபதியின் செயலாளராகவும், ஜனாதிபதியின் இணை செயலாளராகவும் பணியாற்றினார். தொடர்ந்து அமெரிக்கா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நார்வே, ஐஸ்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் கவர்னராக பணிபுரிந்துள்ளார்.

தீவிர ஆலோசனை
2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 14-ந்தேதி மேற்கு வங்காள மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார். 2011-ம் ஆண்டு சென்னை கலா சேத்ரா பவுண்டேசன் சேர்மனாக நியமிக்கப்பட்டு 2014-ம் ஆண்டு மே மாதம் வரை அந்த பொறுப்பில் இருந்தார். தற்போது ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக கோபாலகிருஷ்ணகாந்தி பெயர் அடிபடுகிறது. இதையடுத்து ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் தொடர்பான ஆலோசனை தீவிரம் அடைந்துள்ளது.
வடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இதனிடையே, எதிர்கட்சிகள் சார்பாக யாரை பொது வேட்பாளராக நிறுத்துவது என்பது தொடர்பான ஆலோசனையில் காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் பாரதிய ஜனதாவை எதிர்க்கும் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இதுதொடர்பாக, காங்கிரஸ் தலைவர்  சோனியா காந்தியை பல்வேறு கட்சித் தலைவர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக மகாத்மா காந்தியின் பேரன்  கோபால கிருஷ்ண காந்தியை நிறுத்த தீவிர ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் கடந்த 2004-ம் ஆண்டு முதல், 2009-ம் ஆண்டுவரை மேற்கு வங்காள மாநில கவர்னராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்