முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கெஜ்ரிவால் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறிய அமைச்சர் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நீக்கம்

செவ்வாய்க்கிழமை, 9 மே 2017      அரசியல்
Image Unavailable

புதுடெல்லி - டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் லஞ்சம் பெற்றதாக குற்றஞ்சாட்டி பதவி நீக்கம் செய்யப்பட்ட அமைச்சர் கபில் மிஸ்ரா ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் விவகாரக் குழு அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார். முன்னதாக, டெல்லி ஆம் ஆத்மி அரசில் தண்ணீர், சுற்றுலா மற்றும் கலாசாரத் துறை அமைச்சராக இருந்த கபில் மிஸ்ரா சனிக்கிழமை அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டார். கபில் மிஸ்ரா ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்து முதல்வர் கெஜ்ரிவால், சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் மீது பரபரப்பு குற்றச்சாட்டுகள் முன் வைத்தார்.

கேஜ்ரிவாலிடம் சத்யேந்திர ஜெயின் ரூ.2 கோடி கொடுப்பதை பார்த்ததகாவும், அதை பார்த்த பிறகுதான் கபில் மிஸ்ரா வெளியேறியதாகவும் இதுகுறித்த விவரங்களை ஆளுநர் அனில் பைஜாலிடம் சமர்ப்பித்துள்ளதாகவும் கபில் மிஸ்ரா கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து கபில் மிஸ்ராவின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்ட நிலையில் தற்போது அவர் கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் ஆட்சியில் நடந்த ரூ.400 கோடி டேங்க்கர் ஊழலை கேஜ்ரிவாலும் அவரது சகாக்கள் இருவரும் தாமதப்படுத்தி வருகிறார் .

மிஸ்ராவின் குற்றச்சாட்டு.
இது தொடர்பான புகார் மனுவை டெல்லி துணைநிலை கவர்னர் அனில் பைஜாலை சந்தித்து கபில் மிஸ்ரா வழங்கினார். ஆனால், அந்த புகார் மனு ஊழல் தடுப்புத் துறைக்கு அனுப்பப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் அது இன்னும் அனுப்பப்படவில்லை என்றும் நேற்று அந்தப் புகார் மனுவை நேரடியாக சிபிஐ-க்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளதாகவும் டெல்லி துணை நிலை கவர்னர் மாளிகை வட்டாரம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்