முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வத்தலக்குண்டுவை சுற்றியுள்ள வனப்பகுதிகளை பாதுகாத்தால் மழை வளம் பெருகும் வனச்சரகர் கருப்பையா தகவல்

வெள்ளிக்கிழமை, 18 ஆகஸ்ட் 2017      திண்டுக்கல்
Image Unavailable

வத்தலக்குண்டு -திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவில் ஈடன்கார்டன் நர்ச்ரி பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் தமிழக வனத்துறையினர் இணைந்து 71வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 71 மரங்களை நடவு செய்து பராமரிக்கும் பணியை துவக்கினார்கள். மரம் நடவு செய்து விட்டு மட்டும் போகாமல் ஈடன்கார்டன் நர்சரி பள்ளி மாணவ மாணவிகள் ஒவ்வொருவரின் பெயரிலும் இந்த மரங்கள் நடவு செய்யப்பட்டது. இந்த மரங்களை பராமரித்து வளர்க்க ஒவ்வொரு மாணவ மாணவிகளும் உறுதி எடுத்தனர். விழாவில் ஈடன்கார்டன் பள்ளி தாளாளர் கென்னடி, தலைமை வகித்து பேசினார். பள்ளிமுதல்வர் எம்மான்ராஜ் ஈடன்கார்டன் நர்சரி பள்ளியில் பயிலும் ஒவ்வொரு மாணவர்கள் பெயரிலும் ஒரு மரம் வருடத்திற்கு ஒன்று என்ற முறையில் வளர்க்கப்படும் என தெரிவித்தார். இந்த நிகழ்சசியில் கலந்து கொண்டு பேசிய பெரும்பள்ளம் வனச்சரகர் கருப்பையா கூறும் போது கொடைக்கானல் மலைஅடிவாரத்தில் குடியிருக்கின்றோம். வனப்பகுதிகளை பாதுகாக்கும் போது மலையில் ஊற்றெடுக்கும் ஊற்றுநீர் ஆறாக பெருக்கெடுத்து மலையின் அடிவாரத்தில் உள்ள 14 அணைகளுக்கு வருகின்றது. வனப்பகுதியை பாதுகாக்க அனைவரும் சபதம் மேற்கொள்ள வேண்டும். காடுவளம் பெருக மழை வளம் பெருகும் என்ற சொல்லை ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டும். வனங்களில் உள்ள விலங்குகள் மற்றும் அனைத்து கோடிக்கணக்கான உயிரினங்கள் தாவரவகைளை பாதுகாக்கவும் அதைப்பற்றிய கல்வியறிவும் பெறுதல் வேண்டும் அதற்கான முயற்சியை வளரும் இளம் பருவ மாணவ மாணவிகளிடம் கொண்டு வரவேண்டும் என தெரிவித்தார். விழாவில் வத்தலக்குண்டு அரிமாசங்க தலைவர் சுப்பிரமணி மற்றும் வனவர்கள் சேதுஜெயராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து